Photoshoot-ன் போது பரபரப்பு! பாகனை தூக்கி வீசியெறிந்த யானை- வைரலாகும் வீடியோ
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள்.
சுபமூகூர்த்த நாளன்று திருமணங்கள் நடைபெறும், அப்படி திருமணம் செய்த ஜோடியொன்று போட்டோ ஷூட் நடத்த விபரீதத்தில் முடிந்துள்ளது.
அந்த சம்பவம் குறித்து பின்வருமாறு,
கோவிலில் திருமணம் முடிந்த கையோடு புதுமணத்தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர், அப்போது கோவிலில் இருக்கும் தாமோதர தாஸ் என்ற யானை அந்த பக்கம் சென்று கொண்டிருந்தது.
It doesn’t get luckier than this for this newlywed couple, their photographer and the elephant’s mahout…
— Sidharth.M.P (@sdhrthmp) November 27, 2022
It’s a story that they can all proudly show and tell their children & grandchildren #video said to be from a wedding shoot in #kerala temple town Guruvayoor #Escape pic.twitter.com/Bo2ZN1aCzh
யானையின் மேல் பாகன் ஒருவர் அமர்ந்திருந்தார், ராதாகிருஷ்ணன் என்ற மற்றொரு பாகன் யானைக்கு அருகே சென்று கொண்டிருந்தார்.
அந்நேரத்தில் போட்டோவின் பிளாஷ் லைட் யானையின் கண்ணில் படவும், யானை மிரண்டு போனது.
உடனே ராதாகிருஷ்ணன் என்ற பாகனை தூக்கியதில் அவரது வேஷ்டி மட்டும் சிக்க பாகன் கீழே விழுந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் பாகன் உயிர்தப்பினார், மற்றவர்கள் அனைவரும் பயந்து ஓட, யானையின் மேலே அமர்ந்திரு்ந்த பாகன் யானையை சமாதானப்படுத்தினார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.