பிக்பாஸ் பிரபலங்களுடன் விருந்து சாப்பிட்ட வனிதா.. மாயா இல்லையே?
தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட பிக்பாஸ் பிரபலங்களின் புகைப்படங்களை வனிதா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
வனிதா
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் தான் வனிதா விஜயகுமார்.
இதனை தொடர்ந்து பெரியளவில் படங்கள் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
நீண்ட நாட்களுக்கு பின்பு கணவரை விவாகரத்து செய்துவிட்டு அடுத்தடுத்து 3 திருமணங்கள் செய்து சர்ச்சை நாயகியாகவே மாறி விட்டார்.
சினிமா பிரேக் கொடுத்து விட்டு, தற்போது சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.
விருந்துக்கு சென்ற பிரபலங்கள்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.
அந்த வகையில், தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட பிக்பாஸ் பிரபலங்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் வனிதா.
இதில் பூர்ணிமா, விஜய், ஜோவிகா, நிக்ஷன் உள்ளிட்ட பிரபலங்கள் இருக்கின்றனர். ஆனால் மாயாவை காணவில்லை.
இதனை கவனித்த பிக்பாஸ் ரசிகர்கள், “பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது மாயாவிற்கு அதிகமாக ஆதரவு கொடுத்த வனிதா ஏன் மாயாவை அழைக்கவில்லையா?” என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |