தளபதி பக்கத்தில் நிற்பது ஜனனியா? குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்!
இலங்கை பெண் ஜனனி தளபதி விஜய் பக்கத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் ஜனனி
இலங்கையிலிருந்து பிக்பாஸ் சீசன் 6 ற்கு சென்று பிரபலமாகியவர் தான் ஜனனி.
இவர் லியோ படத்தில் விஜயுடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் திரைப்பட ஷீட்ங்கிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் படங்கள், பாடல்கள் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தளபதி பக்கத்தில் இருக்கும் புகைப்படம்
அந்த வகையில், லியோ படத்தில் ஜனனி நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இதனை ஜனனியே சில சந்திப்புகளில் ரசிகர்களுக்கு கூறியிருந்தார்.
இப்படியொரு நிலையில் த்ரிஷாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
புகைப்படத்தில் பார்க்கும் பொழுது தளபதி பக்ககத்தில் ஹோட்டலில் வேலைச் செய்யும் பெண் போல் நிற்கிறார்.
ஜனனி லியோ படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ஆனால் சரியாக என்ன கதாபாத்திரம் என உறுதியாகவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.