போட்டோகிராபரை அடித்த புது மாப்பிள்ளை! புரண்டு கீழே விழுந்து வயிறு குலுங்க சிரித்த மணமகள்!
திருமண நிகழ்வுகளை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிக் கொடுப்பதில் போட்டோகிராபர்களின் பங்கு என்பது அபரிவிதமானது. அந்த வகையில் மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போட்டோகிராபருக்கு நடந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போட்டோகிராபர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
பின்னர் மணமகளை மட்டும் புகைப்படம் எடுக்கும் அவர், சரியான போஸிற்காக மணப்பெண்ணின் கன்னத்தில் கைவைத்து இப்படி நில்லுங்கள் எனச் சரி செய்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
I just love this Bride ?????? pic.twitter.com/UE1qRbx4tv
— Renuka Mohan (@Ease2Ease) February 5, 2021
அந்த நேரம் இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த புதுமாப்பிள்ளை திடீரென கோபப்பட்டு ஓங்கி பளார் என போட்டோகிராபரை அறைகிறார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழப்பத்தில் நிற்கிறார். ஆனால் புது மாப்பிள்ளை போட்டோகிராபரை அடித்த மறு கணமே மணப்பெண் குலுங்கிக் குலுங்கி சிரிக்கிறார்.
அவரால் சிரிப்பை அடக்க முடியாமல் தரையில் விழுந்து சிரிக்கிறார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் சிலர், இது பிராங்க்காக கூட இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.