இனி இந்த APPஇல் இருந்து மொபைல் ரீசார்ஜ் செய்தால் கட்டணம்…. எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனமான போன் பே தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பை விடுத்துள்ளது.
போன் பே செயலியில் இருந்து செல்போனுக்கு ரீசார்ஜ் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில், ரூ.50 முதல் ரூ.100 வரையிலான ரீசாஜ்களுக்கு 1 ரூபாயும், ரூ.100-க்கு மேலான ரீசார்ஜ்களுக்கு 2 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என போன் பே நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கிரெடிட் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்யப்படும்போது
Processing fees என்ற செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும் என சமீபத்தில் போன் பே அறிவித்தது.
இந்த நிலையில் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என போன் பே நிறுவனம் தெரிவித்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.