Phone Not Charging: இந்த 8 விஷயங்கள் காரணமாக இருக்கலாம்
இன்றைய சூழலில் பலருக்கும் காலைப்பொழுது விடிவதே ஸ்மார்ட்போனுடன் தான், போன் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலையே இருக்கிறது.
ஒருநாளில் அதிகபட்ச நேரம் செலவழிப்பது ஸ்மாரட்போனுடன் மட்டுமே, அது மட்டும் கையில் இல்லை என்றால் அவ்வளவு தான்.
சார்ஜிங் போடும் நேரம் கூட பலராலும் காத்திருக்க முடியாது, அப்படி சார்ஜ் செய்யும் போது சில நேரங்களில் சார்ஜ் ஆகாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையை ஒருசிலர் கடந்து வந்திருக்கலாம்.
உடனே ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டு சர்விஸ் சென்டர் செல்வதற்கு முன்பாக என்ன காரணமாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
போனை சார்ஜ் செய்வதற்கு பயன்படுத்தும் சார்ஜிங் கேபிள் சேதமடையாமல் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும், இது சரியாக இல்லை என்றால் சார்ஜ் ஏறாது, உங்களிடம் வேறு சார்ஜிங் கேபிள் இருந்தால் அதை கொண்டு சரியாக இருக்கிறதா என்பதை சோதித்து பார்க்கவும்.
இதேபோன்று Power Outletயை சரிபார்க்கவும், வேறு ஏதேனும் சாதனத்தை இணைத்துவிட்டு சரியாக வேலை செய்கிறதா என்பதை பார்க்கவும்.
அடுத்ததாக Charging Port சுத்தமாக இருக்கிறதா என பார்க்கவும், தூசி இருந்தாலும் சார்ஜ் ஆவதில் சிக்கல்கள் எழலாம். உலர்ந்த சிறிய ப்ரஷ் அல்லது துண்டை பயன்படுத்தி சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்திப் பார்க்கவும்.
Andrew Lanxon/CNET
உங்களது போனை Restart செய்துவிட்டு பயன்படுத்தி பார்க்கவும், பவர் ஆப் செய்துவிட்டு ஒரு நிமிடத்திற்கு பின்னர் ஆன் செய்து பயன்படுத்தலாம்.
உங்களுடைய போனின் Software அப்டேட் ஆகி இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும், Softwareல் பிரச்சனைகள் இருந்தாலும் ஒருசில நேரங்களில் சார்ஜ் ஆவதில் சிக்கல் இருக்கலாம்.
Background Applications இயங்கிக் கொண்டிருந்தாலும் சார்ஜ் ஆவதில் சிக்கல்கள் இருக்கும், எனவே தேவையற்ற செயலிகளை அணைத்துவிடவும்.
உங்களிடம் வேறு சார்ஜர் இருந்தால் பயன்படுத்தி பார்க்கலாம், கடைசியாக பற்றரியை கழற்றிவிட்டு உலரவைத்துவிட்டு பயன்படுத்தலாம்.
Getty Images