திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே மணமகனிடம் இருந்து வந்த போன் கால்.. கதறிய அழுத பெற்றோர்கள்!
புதுச்சேரியை அடுத்த புதுசாரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிவபாக்கியம் என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 1 ம் திகதியில் திருமணம் நடந்தது. இதனையடுத்து, மனைவியிடம், ஏழுமலை பணம், நகை, வீட்டு பத்திரம் என கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதனால், மனமுடைந்து பெற்றோரிடம் கூற தாலி சடங்கின் போது தருவதாக தெரிவித்துள்ளனர். இதன்பின்னும் ஏழுமலை அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால், கடந்த நாளில் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் நடக்க, மனைவி இறந்துவிட்டதாக மாமனார் வீட்டாரிடம் தகவல் அளித்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறியபடி வந்துள்ளனர். மேலும், எங்கள் மகளை அடித்துகொன்றுவிட்டான் என பெற்றோர்களும் உறவினர்களும் போலீசாரிடம் புகார் அளிக்க, விசாரணையை தொடர்ந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.