ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை குடியுரிமையை மாற்றும் தீவு பற்றி தெரியுமா?
ஸ்பெய்னுக்கும் – பிரான்ஸிற்கும் இடையில் பிடாசோ நதியினால் பிரிக்கப்படும் பகுதியில் ஓர் தீவு காணப்படுகின்றது. இந்த தீவின் பெயர் ஃபெசண்ட் தீவு(Pheasant Island) எனப்படுகின்றது.
இந்த தீவிற்கு ஓர் விசித்திரமான சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த தீவு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவையும் இரு வேறு நாடுகளுக்கு சொந்தமானதாக மாறுகின்றது.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இந்த தீவினை 1659ம் ஆண்டு முதல் ஓர் உடன்படிக்கையின் அடிப்படையில் ஆட்சி செய்து வருகின்றன.
ஒவ்வொரு டிசம்பர் மாதமும் பிரான்ஸ் அரசாங்கப் பிரதிநிதிகள் ஸ்பெய்ன் பிரதிநிதிகளிடம் ஃபெசண்ட் தீவின் ஆட்சி அதிகாரத்தை எஞ்சியிருக்கும் ஆறு மாதங்களுக்கு ஒப்படைப்பார்கள்.
ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் இந்த தீவு மீளவும் ஸ்பெய்னிடம் ஒப்படைக்கப்படுகின்றது.
இந்த தீவு பிரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தும் 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த தீவுகளுக்குள் எவரும் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இரண்டு நாடுகளின் கடற்படையினர் மட்டும் தங்களது ஆட்சிக் காலத்தில் பராமரிப்பு பணிகளுக்காக இந்த தீவுகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு மேலதிகமாக இருன் அல்லது ஹென்டாயா ஆகிய மாநகரசபைகளின் பணியாளர்கள் துப்புரவு மற்றும் தோட்டப் பராமரிப்பு பணிகளுக்காக இந்த தீவுகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
30 ஆண்டுகள் நீடித்து வந்த பிரான்ஸ் – ஸ்பெய்ன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பய்ரனீஸ் உடன்படிக்கை இங்கு கைச்சாத்திடப்பட்டுள்ளது.
1659ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் திகதி இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த தீவுகளில் பிரான்ஸ் மன்னர் 14ம் லுயிஸ் மன்னருக்கும், ஸ்பெய்னின் நான்காம் பிலிப் மன்னரின் புதல்விக்கும் இடையில் இந்த தீவுகளில் தான் திருமணம் நடைபெற்றது.
இந்த தீவில் எவரும் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.