பெட்ரோல் போட சென்ற நபரின் வாழ்க்கையைத் திருப்பிப்போட்ட சம்பவம்: திடீரென அடித்த அதிஷ்டம்!
பெட்ரோல் போடச் சென்ற நபருக்கு எதிர்பாரா விதமாக திடீரென அதிஷ்டம் அடித்த சம்பவம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
லாட்டரி அதிஷ்டம்
அமெரிக்காவில் மேற்கு ப்ளூம்ஃபீல்டு பகுதியை சேர்ந்தவர் மேத்யூ ஸ்பால்டிங் (41) இவர் அண்மையில் தனத காரில் சென்றபோது எரிப்பொருள் குறைவாக இருந்ததால் அருகில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு சென்று வாகனத்திற்கு எரிபொருளை நிரப்பியிருக்கிறார்.
பிறகு கட்டணத்தை மேத்யூ செலுத்தியிருந்தார். மீதி பணமான 5 டொலரை கொடுத்திருக்கிறார்.
அப்போது அந்த வழியே லாட்டரி டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கும் நபரிடம் மீதிப்பணத்தில் ஒரு டிக்கெட் வாங்கியிருக்கிறார். அந்த டிக்கெட் எடுத்த கொஞ்ச நேரத்தில் 107,590 அமெரிக்க டொலர்கள் (சுமார் 87 லட்சம் ரூபாய்) பரிசாக கிடைத்திருக்கிறது.
லாட்டரி அடித்த சந்தோசத்தில் இருந்த மேத்யூ ஸ்பால்டிங்யிற்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.