வாங்கிய லாட்டரி டிக்கெட்டை அங்கேயே பாதி சுரண்டி கீழே வீசிட்டு போன பெண்! அடித்த ஜாக்பாட்...!
அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் லாட்டரி கடையில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார் அமெரிக்க பெண்மணி ஒருவர்.
வாங்கிய லாட்டரி டிக்கெட்டை அங்கேயே பாதி சுரண்டி கீழே போட்டுள்ளார். 10 நாட்களுக்கு பின், லாட்டரி கடையின் உரிமையாளர் கடையை சுத்தம் செய்த போது அங்கிருக்கும் லாட்டரி டிக்கெட்டை கண்டெடுத்தார்.
லாட்டரி கடையை இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம் ஒன்று நடத்தி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடைசியில் பார்த்தால் கீழே கண்டெடுக்கப்பட்ட அந்த லாட்டரி சீட்டில் அதை வாங்கியவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் ஜாக்பாட் பரிசு அடித்துள்ளது.
அதாவது இந்திய மதிப்பில் 7.2 கோடி ரூபாய். ஆனால் கடையின் உரிமையாளர் அபி ஷா, யார் இந்த சீட்டை வாங்கினாரோ அவரை தொடர்பு கொண்டு மறுநாளே அவர்களுக்கு சொந்தமான லாட்டரி சீட்டை ஒப்படைத்துள்ளனர்.
கடையின் உரிமையாளரான அபி ஷா, நினைத்திருந்தால் அவரே கூட அதை வைத்திருந்திருக்கலாம். ஆனால் நேர்மையாக அந்த சீட்டை வாங்கிய வாடிக்கையாளரை தேடிப்பிடித்து கொடுத்துள்ள சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து கூறிய அபி ஷா, 'தற்போது லாட்டரி பரிசு விழுந்த அந்த பெண் எங்கள் கடையின் நீண்ட நாள் வாடிக்கையாளர்.
சம்பவத்தன்று குப்பைதொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சுரண்டப்படாத லாட்டரியை நான் சுரண்டி அதை வைத்திருந்தேன். அதற்கு தான் இப்போது 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அடித்திருந்தது.
அந்த சீட்டை எனது அம்மா தான் விற்பனை செய்தார். ஒரு நாள் இரவு மட்டும் நான் கோடீஸ்வரனாக இருந்தேன். அதுவே போதும்' என்கிறார் லாட்டரி சீட்டு கடை உரிமையாளரின் மகன் அபி ஷா.
இதுகுறித்து கூறிய லாட்டரி சீட்டு உரிமையாளர், 'நான் 10 நாள்களுக்கு முன் இங்கு வந்து உணவு நேர இடைவேளையின் போது லாட்டரி சீட்டு வாங்கினேன்.
பாதி மட்டுமே சுரண்டிய போது அதிலிருந்து எண் நிச்சயம் வெல்லாது என கணித்து பணிக்கு செல்லும் அவசரத்தில் கீழே போட்டுவிட்டேன். ஆனால் அபி ஷா குடும்பத்தார் செய்த செயல் என்னை மிகவும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது' எனக் கூறினார்.