இன்ப அதிர்ச்சி... பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைவு!
இந்தியாவில் தொடர்ந்து வரலாறு காணாத விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தன. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110 ஐ கடந்தது.
அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பல கண்டனங்கள் எழுந்தாலும், பெட்ரோல் விலை குறைந்த பாடு இல்லை. நீண்ட நாள் மக்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.8 மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50 ஆம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 ஆம் குறைந்துள்ளது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.22 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6.70 ரூபாயும் குறைந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.