பெருங்காயம் ஆண்மைத் தன்மையைக் குறைத்துவிடுமா? முழுசா தெரிஞ்சிகிட்டு பயன்படுத்துங்க...!
சமையலில் அதிகமாக பெருங்காயம் சேர்த்தால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை வந்துவிடும் என ஒரு கட்டுக்கதை உலவி வருகிறது. அதை அம்மாக்களோ அல்லது பெரியவர்களோ சொல்லக் கேட்டு இளைய தலைமுறையும் அதை அப்படியே நம்பிவிடுவார்கள்.
இதனால் பாவம் அந்த பெருங்காயத்திற்கான மதிப்பு , மருத்துவ குணங்கள் எல்லாமே கிடைக்காமல் போய்விடும். சரி உண்மையில் பெருங்காயம் ஆண்மைத் தன்மையைக் குறைத்துவிடுமா..? நிச்சயமாக இல்லை.
உண்மையில் பெருங்காயம் பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கும் நல்ல மருந்து. இதை ஆயுர்வேதத்திலும் குறிப்பிட்டுள்ளனர். ஒரு சிட்டிகைப் பெருங்காயத்தை உணவில் சேர்த்துக்கொண்டாலும் ஆண்களின் பாலியல் குறைபாடு பிரச்னைகள் தீருமாம்.
இது முன்னோர்கள் காலத்திலிருந்தே பின்பற்றப்படும் மூலிகை மருத்துவமும் கூட. பெருங்காயம் வயிற்று பிரச்னை , ஆஸ்துமா, நோய் அழற்சி , இறுமல் போன்ற பிரச்னைகளுக்கும் உதவும். அதுமட்டுமன்றி இரத்த அழுத்தம் , சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல நண்பன்.
பெண்கள் மாதவிடாய் நாட்களில் வயிறு இறுக்கிப் பிடித்தல், அடி வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் மோரில் பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகைக் கலந்து வெந்தையமும் சேர்த்துக் குடித்தால் குணமாகும். ஆக... உணவில் பெருங்காயம் சேர்ப்பதில் தயக்கம் வேண்டாம்.
அதற்காக அள்ளி கொட்டாதீர்கள். சிட்டிகைக் கணக்கில் சேர்த்தாலே மணமாக இருக்கும். மருத்துவ குணமாகவும் இருக்கும்.