கை விரல்களில் நகங்கள் இல்லை! வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்
சமீபத்தில் Redditல் வெளியான புகைப்படம் ஒன்று உலகம் முழுவதும் பேசுப்பொருளாகியுள்ளது, அதாவது கைவிரல்கள் நகங்கள் இல்லாத அந்த புகைப்படம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் Redditல் கை ஒன்றின் புகைப்படம் வெளியானது, அதில் 5 விரல்களிலும் நகங்கள் இல்லை.
இதைப்பார்த்த பலரும் அதிர்ச்சியானதுடன், கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர், மருத்துவரீதியாக இவ்வாறான பாதிப்புக்கு Anonychia congenita என்பது பெயராம்.
Anonychia congenita
கைவிரல்கள் மற்றும் கால்விரல்களை பாதிப்புக்குள்ளாக்கி நகங்களே இல்லாமல் இருக்கும் நிலைக்கு Anonychia congenita என்று பெயர்.
பிறக்கும்போது நகங்கள் இல்லாமல் இருக்குமாம், சிலருக்கு பாதி நகங்கள் வரை வளர்ந்து இருக்கலாம் அல்லது அனைத்து விரல்களும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
மிகவும் அரியவகை பாதிப்பான இந்த நோய், நகங்கள் உருவாவதற்கு உதவும் கட்டமைப்பையும் தாக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகங்கள் வளர்வதை தவிர, வேறு எந்தவொரு பாதிப்பும் இருக்காது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எதனால் ஏற்படுகிறது?
RSPO4 என்ற ஜீனில் ஏற்படும் பிறழ்வு இந்த நோய்க்கான காரணம் என தெரியவந்துள்ளது, R-spondin-4 என்ற புரோட்டீன்களை உருவாக்குவதில் இந்த ஜீனின் பங்கு அதிகம், இவை பாதிப்படைவதால் நகங்கள் உருவாவதும், வளர்வதும் தடுக்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையம், இந்த பாதிப்புக்கு சிகிச்சை எதுவும் இல்லை என்றும், வேண்டுமெனில் செயற்கை நகங்களை பொருத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.