பெருவிரலை வைத்து குணத்தை கணிக்கலாமா? சாமுத்ரிகா சாஸ்த்திரம் சொல்லும் உண்மை
ஒருவரது குணாதிசயங்களை பலவாறு அறியலாம். அதுவும் ஒருவரது அதிர்ஷ்டத்தை அவரின் பெருவிரலின் வடிவத்தைக் கொண்டே கணிக்க முடியும். அத்துடன் அவரின் குணாதிசயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்திய ஜோதிடத்தில் உள்ள சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு கை வடிவம் மற்றும் அமைப்புடன் பிறந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் ஒருவரது கையை பார்த்து அவரின் குணாதிசயங்களை கூறலாம்.
அதிலும் குறிப்பாக ஒருவரது பெருவிரலின் மேல் மற்றும் கீழ் பகுதியும் அந்நபரின் சக்தியை பற்றி கூறுவதாக ஜோதிடம் கூறுகின்றது.
இதன்படி, பெருவிரலின் மேல் பகுதி கீழ் பகுதியை விட பெரியதாக இருந்தால், அந்நபர் வலிமையானவர்.
அதே போன்று பெருவிரலின் கீழ் பகுதியை விட மேல் பகுதி சிறியதாக இருந்தால், அந்நபரிடம் சிறந்த பகுத்தறியும் ஆற்றல் இருக்கும். ஒருவேளை இரண்டும் சமமாக இருந்தால், அவர் வாழ்க்கையில் மகத்தான வெற்றியைப் பெறுவார். ஒருவரது பெருவிரலின் அளவு மட்டுமின்றி, அதன் அமைப்பை வைத்தும் அவரின் சுவாரஸ்யமான குணாதிசயங்களை கூறலாம்.
அப்படியாயின், ஒருவரின் பெருவிரல் நேராக உள்ளதா அல்லது வளைந்து உள்ளதா என்று பார்த்து அவர்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்வது எப்படி என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. நேரான பெருவிரல்
- பெருவிரல் நேராக இருப்பவர்கள் எதையும் நன்கு பகுத்தறியும் ஆற்றல் கொண்டவராக இருப்பார்கள்.
- மற்றவர்களை விட இவர்களிடம் சற்று அதிகார உணர்வை வெளிப்படுத்தப்படும்.
- உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பீர்கள். இதனால் உங்களை அவ்வளவு எளிதில் யாராலும் ஏமாற்ற முடியாது.
- நீங்கள் ஒருவரை நம்பும் வரை, எவராலும் உங்களை பயன்படுத்திக் கொள்ள முடியாது.
- உங்களிடம் நம்பிக்கையைப் பெறுவது என்பது சற்று கடினமான விடயம்.
- எப்போதும் விழிப்புடன் இருக்கும் நீங்கள் ஆபத்து வரும் முன்னரே அதனை உணர்வீர்கள்.
- எவ்வளவு கடினமான சூழலாக இருந்தாலும், கனிவாக இருக்கும் குணம் உங்களிடம் இருக்கும்.
- அதிகமான தன்னம்பிக்கை அதிகம் கொண்டவராக இருக்கும் நீங்கள், ஒழுக்கம் மற்றும் எதையும் சரியாக செய்ய வேண்டும் என நினைப்பீர்கள்.
- ஆக மொத்தத்தில் மற்றவர்களிலும் பார்க்க நீங்கள் மன உறுதி கொண்டவர்களாக இருப்பீர்கள்.
2. வளைந்த பெருவிரல்
- ஒருவரின் பெருவிரல் வளைந்து இருந்தால் நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள்.
- புதிய சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை எளிதில் மாற்றிக் கொள்வீரகள்.
- மற்றவர்கள் மீது விரைவில் அனுதாபம் காட்டுவீர்கள். இதனால் மற்றவர்கள் உங்கள் உணர்ச்சிகளை பயன்படுத்தி கொள்வார்கள்.
- தங்களுடைய வேலைகளை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளும் நபராக இருப்பீர்கள்.
- வளைந்த பெருவிரலைக் கொண்டவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் மற்ற உறவுகளுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள்.
- சுய பாதுகாப்பு தொடர்பான உணர்ச்சி நுண்ணறிவை வளர்த்துக் கொள்ள அதிக நேரம் எடுப்பீர்கள்.
- இப்படியான பெருவிரலைக் கொண்டிப்பவர்கள் அவர்களின் இலக்குகளை அடைய பல பாதைகளில் முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.
- கலை, நடிப்பு, நாடகம், சாகச விளையாட்டுகள் ஆகியவற்றில் திறமையானவர்களாக இருப்பார்கள்.
- உங்களிடம் ஏதாவது குறைபாடு என்றால் அது பற்றியநெகிழ்வுத்தன்மை மற்றும் சுய சந்தேகம் உங்களிடம் இருக்கிறது என்று அர்த்தம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |