இறந்த தந்தை கனவில் தோன்றியதால் மகனுக்கு அடித்த ஜாக்போட்! லட்சாதிபதியான மகன்: எவ்வளவு தெரியுமா?
இறந்த தந்தை கனவில் வந்து லொத்தர் இலக்கம் கூறியதால் பல இலட்சம் ரூபாய் பணபரிசு பெற்ற நபரின் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இறந்த பின்னர் பெற்றோர்களின் நிலை
பொதுவாக வீடுகளில் பெற்றோர்கள் இறந்த பின்னர் அவர்கள் கனவில் வந்து சில முடிவுகள் கூறினார்கள் என்று பலரும் கூறி மகிழ்ந்ததை பார்த்திருப்போம்.
அந்த வகையில் கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் பர்லிங்டன் பகுதியையைச் சேர்ந்த மைக்கல் டேய்லர் என்ற 50 வயதான ட்ரக் சாரதி என்பவரின் தந்தை ஒருவர் கனவில் வந்துள்ளார்.
அவர் கனவில் வந்தது மட்டுமல்ல லொத்தர் சீட்டிற்கான ஒரு இலக்கத்தை கூறியுள்ளார். இதனை ஞாபகம் வைத்து குறித்த இளைஞரும் லொத்தர் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபர் சுமார் கடந்த 30 ஆண்டுகளாக இவர் லொத்தர் சீட்டிலுப்பு விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றாராம்.
கனவில் ஜாக்போட் அடித்த நபர்
ஆனால் அவருக்கு பெரியதாக இலாபம் ஏதும் வராமல் இருந்த காரணத்தினால், தந்தையின் பேச்சை கேட்டு வொத்தர் சீட்டை எடுத்த காரணத்தினால் இவருக்கு ஒரு லட்சம் டொலர் பணப்பரிசு கிடைத்துள்ளது.
அவரின் வெற்றியை சமூக வலைத்தளங்களில் தந்தைக்கு நன்றி கூறிய பகிர்ந்துள்ளார்.
மேலும் இவரின் செய்தி பார்த்த பலரும்,“ எங்கள் கனவில் யாரும் இது போல் வருவது இல்லையே”
என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.