அணிலுக்கு தாகம் தீர தீர தண்ணீர் கொடுத்த நபர்! பார்வையால் நன்றி கூறி கோடி இதயங்களை நெகிழ வைத்த காட்சி
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா ட்விட்டரில் எப்போதும் வன விலங்குகளின் அன்பு பரிமாற்றம், அவற்றின் வாழ்விடம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பலரின் கவனம் பெற்று வைரலாகியுள்ளது.
அதில் அணில் ஒன்று தாகத்தால் தவித்த படி வெயிலில் இளைஞர் ஒருவரை நோக்கி வர அதற்கு பிளாஸ்டிக் பாட்டிலில் இளைஞர் தண்ணீர் அளித்து அணிலின் தாகம் தீர்த்துள்ளார். இறுதியாக தாகம் தீர்த்த அணில் இளைஞரின் கையில் அமர்ந்து நீர் அருந்தி விட்டு அவரை பார்த்த படி நன்றி தெரிவிக்கும் வகையில் செய்த செயல் இணையத்தில் பலரின் மனங்களை வென்றுள்ளது.
பின்னர் மீண்டும் நீர் அருந்தி தனது தாகம் முழுமையும் தீர்த்துக் கொண்டது. தற்போது இந்த காணொளி காட்டுத் தீயாய் பரவி வருகின்றது.
Please care to share...
— Susanta Nanda IFS (@susantananda3) March 19, 2021
Our planet will be a much better place pic.twitter.com/IdznF9nrC1