ஒரே நேரத்தில் 5 மனைவிகளுக்கும் வளைகாப்பு நடத்திய கணவர்.. ஆடிப் போன இணையவாசிகள்
அமெரிக்காவில் 5 பெண்களுக்கு ஒரே நாளில் கணவர் வளைகாப்பு நடத்திய சம்பவம் இணையவாசிகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த ஷெட்டி வில்ஸ் என்ற நபர் ஒரே நேரத்தில் 5 பெண்களுடன் பழகி வந்துள்ளார்.
இவர்களுடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாறி 5 பெண்களையும் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
தற்போது 5 பெண்களும் கர்ப்பமாக இருக்கிறார்கள். இதனால் ஒரே நாளில் 5 மனைவிகளுக்கும் வளைகாப்பு நிகழ்வு நடத்தியுள்ளார்.
மனைவி கூறிய பதில்
இது தொடர்பில் மனைவிகளில் ஒருவரான ஆஷ்லிடம் கேட்ட போது, “ குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நாங்கள் இப்படி ஒற்றுமையாக இருக்கிறோம்.” என பதிலளித்துள்ளார். இந்த செய்தி புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும், “இந்த காலத்தில் ஒருவர் ஒருவருடன் வாழ்வதே பெரிய விடயமாக பார்க்கும் பொழுது அமெரிக்கரின் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும்..” என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |