viral video:படமெடுத்து நிற்கும் நாகங்களுக்கு அசல்ட்டாக தண்ணீர் கொடுக்கும் நபர்...பறவைக்கும் காட்சி
படமெடுத்து நிற்கும் நாகங்களுக்கு கொஞ்சமும் பயமின்றி தண்ணீர் கொடுத்து உதவும் நபரின் அசாத்திய தைரியத்தால் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாகப்பாம்பு (கோப்ரா) உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்புகளில் ஒன்றாகும். நாகங்கள் எதிரிகளைத் தாக்கத் தயாராகும் போது எழுந்து படமெடுக்கும்.
நாகப்பாம்புகள் எறத்தாழ இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக் கூடியன. ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களுக்கிடையில் அவை முட்மையிடுகின்றன.
ஒரு தடவையில் நாகமானது 12 முதல் முப்பது முட்டைகளை இடுகின்றன. 48 முதல் 69 நாட்களில் அவற்றில் இருந்து பாம்பு குட்டிகள் வெளிவரும். பறவைகளை போல் பாம்புகளும் முட்டையை அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன.
நாக பாம்பு குட்டிகள் பிறக்கும்போது 20 முதல் 30 சென்ரி மீற்றர் நீளமுடையனவாக இருக்கும். நாக பாம்புக் குட்டிகளின் நச்சுப் பைகள் அவை முட்டையிலிருந்து வெளியேறும் போதே செயற்பட கூடிய நிலையில் இருக்கும்.
அப்படி நாக பாம்புகளின் குட்டிகள் கூட பிறக்கும் போதே கொடிய விஜத்தை கொண்டிருப்பதால் அதன் பெயரை கேட்டாலே பலருக்கும் இனம் புரியாத பயம் இருக்கும்.
இந்நிலையில் நபரொருவர் படமெடுத்து நிற்கும் நாகங்களுக்கு அச்சமின்றி தண்ணீர் கொடுத்து உதவிய பகீர் கிளப்பு காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |