தலைக்கேறிய குடிபோதையில் நண்பரின் உடலை வெட்டி சாப்பிட்ட நபர்; பதறவைத்த சம்பவம்!
குடிபோதையில் நபர் ஒருவர் தனது நண்பர்களின் உடலை வெட்டி சாப்பிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் வசித்துவரும் எட்வர்ட் செலஸ்னே என்பவர், தனது வீட்டிற்கு தன் 3 நண்பர்களை அழைத்திருக்கிறார். அப்போது அவர்கள் நால்வரும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.
இதையடுத்து, குடிபோதை தலைக்கு நிலையில், ட்வர்ட் செலஸ்னே, தன் 3 நண்பர்களையும் கத்தியால் வெட்டிக் கொன்றுவிட்டு, அவர்களின் உடல் உறுப்புகளை வெட்டி சமைத்துச் சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் எட்வர்ட் செலஸ்னே-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேலும், அவருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.