மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு விடுதலை! விரைவில் சந்தைக்கு வரும் விஷேட ஆடை
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை கட்டுப்படுத்துவதற்கு பெண்ணொருவர் விஷேட ஆடையொன்றை வடிவமைத்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடுமையான வயிற்று வலி
ஹங்கேரி நாட்டில் எனும் நாட்டிலுள்ள புடாபெஸ்ட் நகரில் வசித்து வரும் பௌலா என்ற பெண்ணொருவர் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியால் அதிக நாட்கள் கஷ்டப்பட்டுள்ளார்.
இதனால் வலியை குறைக்க வேண்டும் என்று எண்ணி, அதற்கு என்ன செய்யலாம் என கடுமையாக சிந்தனையில் இருந்துள்ளார்.
அப்போது தான் மாதவிடாய் காலங்களில் போட்டுக் கொள்ளும் படி ஆடையை வடிவமைக்கலாம் என்ற யோசனை வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆர்ட்டெமிஸ் என அழைக்கப்படும் பாடிசூட்டை தயாரித்துள்ளார்.
இந்த ஆடை வெப்ப அலைகள் மற்றும் ஜெல் பட்டைகள் மூலமாக செயல்ப்படுகிறது. இந்த ஆடையை தயாரிக்க பயன்படுத்தும் டேன்ஸ் ஜெல் பட்டைகள் பிரசவத்தின் போது பயன்படுத்தப்படுகிறது.
மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைக்கும் ஆடை
இதனால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை கட்டுபடுத்தலாம். இந்த நுட்பமுறை கொண்டு தான் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடை எவ்வாறு வேலைச் செய்கிறது என சுமார் 250 கும் மேற்பட்ட பெண்களை வைத்து சோதனை நடத்தியுள்ளார்.
தொடர்ந்து இந்த ஆடை சிறப்பு என்ன தெரியுமா? மாதவிடாய் ஏற்படும் வலியை மூளைக்கு துண்டும் வெப்ப பேனல்கள்களையும் கருப்பைத்தசைகளையும் இலகுவானதாக மாற்றுகிறது.
இதனால் இந்த சோதனையில் பெண்களுக்கு வலி ஏற்படவில்லை. இந்த ஆடை விரைவில் சந்தைக்கு வரும் எனவும் இந்த ஆடை இந்திய மதிப்பிற்கு ரூ.19 ஆயிரம் வரை விற்பனையாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆடையை அதிக வலியால் தவிக்கும் பெண்கள் பயன்படுத்தக்கூடியதாய் இருக்கிறது. அவ்வப்போது மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது அவசியம் என்பது் குறிப்பிடத்தக்கது.