இரவில் perfume போட்டு தூங்கினால் என்ன நடக்கும்? இனி செய்யாதீங்க
பொதுவாக வெளியில் செல்லும் பொழுது பெரும்பாலானோருக்கு வாசனை திரவியம் பயன்படுத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
வாசனை திரவியம் பயன்படுத்தாமல் அவர்கள் வெளியில் செல்ல விரும்ப மாட்டார்கள். இதனை பகல் நேரங்கள் அல்லாமல் மாலை மற்றும் இரவு நேரத்தில் வெளியில் செல்லும் பொழுது பயன்படுத்த வேண்டாம் என சாஸ்த்திரங்கள் எச்சரிக்கின்றன.
சாஸ்திரங்கள் படி, வாசனை திரவியம் பயன்பாடு ஒரு மங்களகரமானதாக கருதப்படவில்லை. அதிலும் குறிப்பாக இரவில் நறுமணம் தொடர்பான எந்தவொரு வாசனை திரவியமும் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறலாம்.
அந்த வகையில், இரவு நேரங்களில் வாசனை திரவியம் பயன்படுத்தினால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இரவு வேளைகளில் வாசனை திரவியம் பயன்படுத்தலாமா?
1. இரவில் வாசனை திரவியம் பயன்படுத்தினால் ஆன்மீக மற்றும் தியானத்திற்கு இடையூறாக அமைந்து விடும், கடவுளின் வருகையும் தடைப்படும். வாசனை திரவியங்கள் நம்மை திசை திருப்பும், இதனால் இரவில் நிம்மதியான தூக்கமும் இருக்காது.
2. வலுவான வாசனையானது இரவு நம்முடைய கனவுகளை பாதிக்கும் எனக் கூறப்படுகின்றது. இது போன்ற பழக்கங்கள் இரவு நேரத்தில் விசித்திரமான அல்லது குழப்பமான கனவுகளை ஏற்படுத்தும்.
3. இந்து மதத்தின்படி, இரவு வேளைகளில் வாசனை திரவியம் பயன்படுத்தினால் கனவுகள் மற்றும் ஆன்மீக விஷயங்கள் தெளிவாக தெரியாது எனக் கூறப்படுகின்றது. அத்துடன் இரவில் கடவுளை நினைத்து தியானம் செய்கிறான் இந்த நேரத்தில் வாசனை திரவியம் பயன்படுத்துவது நல்லதல்ல. எனவே முடிந்தவரை இரவு வேளைகளில் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |