வயிற்று தொடர்பான பிரச்சனையால் அவதியா? Pepto Bismol மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல்.
அளவுக்கு அதிகமான உணவை உட்கொள்வது, அவசரமாக சாப்பிடுவது, காரமான துரித உணவுகள், சாப்பிடாமல் இருப்பது என பல காரணங்களால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் எழுகின்றன.
இதனை சாதாரண ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது, ஏனெனில் வயிறு சரியில்லை என்றாலே அன்றைய நாள் முழுதும் தர்மசங்கட நிலைக்கு ஆளாகக்கூடும்.
இத்துடன் வயிற்றுப் போக்கு, புளித்த ஏப்பம் என இன்னும் பல பிரச்சனைகள் சேர்ந்து கொண்டால் அவ்வளவு தான்.
இதற்கெல்லாம் தீர்வாக கிடைக்கும் Pepto Bismol மாத்திரைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Pepto Bismol
வயிற்று பிரச்சனைகள், குமட்டல், நெஞ்செரிச்சல், செரிமானமின்மை, வயிற்றுப் போக்கு என பல பிரச்சனைகளை தீர்க்கக்கூடியது Pepto Bismol.
கடந்த 2020ம் ஆண்டு Pharmacy Times நடத்திய கருத்துக்கணிப்பில் வயிற்று தொடர்பான பிரச்சனைகளை மிக எளிதாக, துரிதமாக Pepto Bismol தீர்க்கக்கூடியது எனவும், இதனை பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Ingredients
ஒவ்வொரு மாத்திரையிலும் Bismuth Subsalicylate 262 mgஆகவும், Calcium Carbonate, Flavor, Magnesium Stearate, Mannitol, Povidone, D&C Red No. 27, Saccharin Sodium, Talc ஆகியன உள்ளது.
எப்படி சாப்பிட வேண்டும்?
12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது, நன்றாக சுவைத்து வாயின் உமிழ்நீரில் கலந்து சாப்பிட வேண்டும், அதிக தொந்தரவு உள்ளவர்கள் அரை மணிநேரத்துக்கு அல்லது ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
24 மணிநேரத்தில் 16 மாத்திரைகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது, வயிற்றுப்போக்கு சரியாகிவிட்டால் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும் அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் சாப்பிடக்கூடாது.
வயிற்று பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும், இதுவே உங்களை நீரிழப்பில் இருந்து பாதுகாக்கும்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
சின்னம்மை அல்லது காய்ச்சல் இருப்பவர்கள் அல்லது அதிலிருந்து மீண்டவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளக்கூடாது.
குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் நேரடியாகவே Pepto Bismol மாத்திரை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
ஒருவேளை Pepto Bismol பயன்படுத்தும் போது, வாந்தி மற்றும் குமட்டலில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
அல்சர், ரத்தப்போக்கு, கருப்பு நிறத்தில் மலம் கழிப்பவர்கள் Pepto Bismol மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சர்க்கரை வியாதி, எலும்பு தொடர்பான பிரச்சனை, கர்ப்பிணிகள், தாய்பாலூட்டும் பெண்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.
தற்காலிகமாக இதை பயன்படுத்தும் போது பெரும்பாலானவர்களுக்கு தொந்தரவுகள் வருவதில்லை, காதில் இரைச்சல், காது கேளாமை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் Pepto Bismol மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம்.
பொதுவான எச்சரிக்கை
மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தானதே.