பெப்டிக் அல்சர்... குடல் அழுகினால் ஆபத்து! இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க...
பெப்டிக் அல்சர் என்பது ஒரு வகையான வயிற்றுப் புண் என்றாலும், இந்த பாதிப்பினல் குடல் அழுகத் தொடங்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பெப்டிக் அல்சர்
அல்சர் என்று கூறப்படும் வயிற்றுப் புண் பிரச்சினை ஒரு ஆபத்தான நோயாகும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் ஆண்டுகளை தாண்டிச் சென்றால் அது புற்றுநோயாகவும் மாறுகின்றது.
பெப்டிக் அல்சரில் இரண்டு வகைகள் உள்ளது. அதாவது இரைப்பை புண் என்று அழைக்கப்படும் வயிற்றுக்குள் ஏற்படுவது ஒன்று, மற்றொன்று சிறுகுடலின் மேல் பகுதியில் ஏற்படுகின்றது.
கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும் இவை சிறுகுடலில் இருந்து பெப்டிக் சாறு கசியத் தொடங்குவதால், அது வயிற்று புண்ணாக மாறுகின்றது.
வயிற்றுப் புண் அறிகுறிகள்
வயிற்றில் ஏதாவது எரிவது போன்று நீங்கள் உணர்ந்தால் வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வயிற்றுப் புண் காணப்பட்டால் வயிறு வீங்குவதுடன், வயிறு நிறைந்த உணர்வும் காணப்படுகின்றது.
குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் பிரச்சனைகள் பெரும்பாலும் வயிற்றுப் புண் நோயாளிகளில் காணப்படுகின்றன.
வயிற்றுப்புண் ஏற்பட்டால், நீங்கள் ஏதாவது குடிக்கும்போது, வலி படிப்படியாக குறையத் தொடங்குகிறது.
எப்படி பாதுகாப்பது?
வயிற்றுப்புண் வராமல் இருக்க புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும்.
காரணமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
ஒற்றைத் தலைவலி, உடல் வலி போன்றவற்றுக்கு இப்யூபுரூஃபன் போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள் இதனாலும் வயிற்றில் காயம் ஏற்படுகின்றது.
அதிகப்படியான மன அழுத்தமும் வயிற்று வலிக்கு காரணமாக இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |