கத்திரிக்காயை இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
கத்தரிக்காய் பலருக்கு விருப்பமான காயாக இருக்கும்.
கத்திரிக்காயில் விட்டமின்கள், மினரல் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன.
இருப்பினும் சில பிரச்சனை இருப்பவர்களுக்கு இது எதிர்வினையான பாதிப்புகளை தரக்கூடும்.
எந்தெந்த பிரச்சனைகள்?
செரிமான அமைப்பு மெதுவாக நடக்கும், எனில் நீங்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கத்தரிக்காய் வாயுவை உருவாக்கும் என்பதால் செரிமானத்தை இன்னும் மோசமாக மாற்றும்.
சரும எரிச்சல், அரிப்பு இருப்பின் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே சரும அலர்ஜி எதுவாக இருந்தாலும் கத்தரிக்காய் சாப்பிடக் கூடாது என மருத்துவர்களே எச்சரிப்பார்கள்.
live organic
மன அழுத்தம் அல்லது மனப்பதட்டம் காரணமாக டிப்ரஷன் மாத்திரைகள் உட்கொள்கிறீர்கள் எனில் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. மீறினால் உங்கள் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.
இரத்த ஓட்டம் சீராக இல்லை. குறைவான இரத்தமே உள்ளது எனில் இரத்த சோகை ஏற்படும். இந்நிலையில் நீங்கள் கத்தரிக்காய் அதிகமாக உட்கொள்கிறீர்கள் எனில் இரத்த உற்பத்தியை தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
கண்களை சுற்றி அரிப்பு, எரிச்சல், பார்வையில் குறைபாடு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருப்பின் கத்தரிக்காய் சாப்பிட வேண்டாம்.
மூல நோய் இருப்பின் கத்தரிக்காய் பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கும். எனவே தவிர்ப்பது நல்லது.
சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிட கூடாது. கத்தரிக்காயில் உள்ள ஆக்ஸலேட் ஸ்டோன் பிரச்சனையை இன்னும் அதிகமாக்கக் கூடும்.