யாரெல்லாம் நெய்யை சாப்பிடக்கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
ஆரோக்கிய உணவாக இருக்கும் நெய்யை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நெய்
நூற்றாண்டு காலமாக நெய் இந்திய சமையலில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உடம்பிற்கு அதிகமான நன்மைகளை வாரி வழங்கும் நெய் மருத்துவத்திற்கும் பயன்படுகின்றது.
செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இளமையாக வைக்கவும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு இன்னும் அதிகமாகவே இருக்கின்றது.
இந்திய உணவுகளான ரொட்டி, பருப்புகள், காய்கறி, பிரியாணி இவற்றிற்கும், இனிப்பு செய்வதற்கும் பயன்படுத்தப்படும் நெய் நிறைவுற்ற கொழுப்புகளால் ஆனதாகும்.
இத்தருணத்தில் இவ்வளவு நன்மையளிக்கும் நெய்யை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
நெய் ஒரு சிலருக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால் அமிலத்தன்மை, அஜீரணம், வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது வயிற்று ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
நெய் நேரடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்காவிட்டாலும், அதிகப்படியான நுகர்வு, உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்ற பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும்.
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் நெய் சாப்பிட்டால், எடையை மேலும் அதிகரிக்கும். மேலும் பல வகையான நோய்கள் ஏற்படலாம். எனவே எடையை குறைக்க நினைப்பவர்கள் நெய் சாப்பிட வேண்டாம்.
உங்களுக்கு ஏற்கனவே இதய பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் நெய் சாப்பிடக்கூடாது. கொழுப்பின் அளவை மோசமாக்கும்.
உங்களது கல்லீரல் ஏற்கனவே கொழுப்பாக இருந்தால் நீங்கள் நெய்யிலிருந்து விலகி இருக்க வேண்டும். இல்லையெனில், இது பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்யும்.
நெய்யில் நிறைவேற்ற கொழுப்பு உள்ளதால், இது கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும். எனவே அதிக கொழுப்பு உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் நெய் சாப்பிட்டால் இதய நோய் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |