கருப்பு கயிற்றை இந்த ராசியினர் கையில் கட்டினால் ஆபத்து… யார் யாருக்கு பேரதிர்ஷ்டம் தெரியுமா?
கருப்பு நிற கயிறு அனைவருக்குமே ஏற்றது அல்ல.
ஜோதிட சாஸ்திரத்தில் கூட சில ராசிக்காரர்கள் கருப்பு நிற கயிற்றினை கை, கால்களில் கட்டக்கூடாது என கூறப்படுகிறது.
அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மணி பிளாண்ட் செடி வளர்க்க போறீங்களா? எப்படி வளர்த்தால் பணம் கொட்டும் தெரியுமா?
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றினை கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை மேஷ ராசிக்காரர்கள் கருப்பு நிற கயிற்றினைக் கைகளில் கட்டினால், ஏதாவது தோஷம் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
விருச்சிகம்
மேஷ ராசிக்காரர்களைப் போன்றே விருச்சிக ராசிக்காரர்களும் கருப்பு நிற கயிற்றை கை, கால்களில் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவேளை இந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றினைக் கட்டினால், செவ்வாய் பகவானால் கிடைக்கும் நற்பலன்கள் தடைபட்டு, பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
வெடித்து சிதறிய ஏ.சி…ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து பலி
யார் கருப்பு கயிற்றினை அணியலாம்
துலாம்
துலாம் ராசி என்பது சனி பகவானின் உயர்ந்த அடையாளமாகும். கருப்பு நிறம் சனி பகவானுக்கு உரிய நிறம். ஆகவே துலாம் ராசிக்காரர்கள் கருப்பு நிற கயிற்றினை கைகளில் கட்டுவது நல்லதாக கருதப்படுகிறது. இதனால் வறுமை நீங்கி, வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசியினர் சனி பகவானை அதிபதியாக கொண்டிருப்பதால் மகர ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றினை கட்டுவது மங்களகரமானதாக கூறப்படுகிறது.
இந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றினை கையிலோ, காலிலோ கட்டினால், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள் நீங்கி, மகிழ்ச்சி பெருரும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான் என்பதால் கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் கருப்பு கயிற்றினை கை, கால்களில் கட்டுவது நல்லது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதன் மூலம் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை சந்தோஷமாகவும், பிரச்சனைகளின்றியும் இருக்கும்.