உங்களுக்கு 50 வயது தாண்டிவிட்டதா? கொழுப்புகளை குறைக்க இந்த 4 உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கோங்க
50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை தடுப்பதற்கும், நரப்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
கொலஸ்ட்ரால்
நமது வயது அதிகரிக்கும் போது, ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் 50 முதல் 60 வயதிற்குள்ளான நபர்கள் பல வகையான நோய்களும் ஆளாகின்றனர்.
அதிலும் கொலஸ்ட்ரால் அளவைக் குறித்து எப்பொழுதும் கவனமாகவே இருக்க வேண்டும். உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகமாகிவிட்டால் அது பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாகி விடுகின்றது.
லிப்பிட் பரிசோதனையை தொடர்ந்து செய்துகொள்வதுடன், உங்கள் தினசரி உணவில் சில ஆரோக்கியமான விஷயங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள், இதனால் எல்டிஎல் அளவு குறையும்.
எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்
புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதுடன், இவை ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நார்ச்சத்தையும் கொண்டுள்ளது.
50 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், பச்சை இலை காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஆனால் சர்க்கரை நோய் இருந்தால், மாம்பழம், அன்னாசி போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பழங்களைத் தவிர்க்கவும்.
வயதான காலத்தில் குறைந்த பட்ச எண்ணெய் உணவுகளையே சாப்பிட வேண்டும். சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஆலிவ் எண்ணெய்யானது கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தினைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.
ஓட்ஸ் அடிக்கடி காலை உணவாக உண்ணப்படுகிறது, இது மிகவும் ஆரோக்கியமான உணவாகும், இதன் மூலம் கொலஸ்ட்ராலை எளிதில் குறைவதுடன், இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் அதிகமாக உள்ளது. இவை எல்டிஎல் கொழுப்பை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை சாப்பிடலாம். இவை கொழுப்பை குறைப்பதற்கு சிறந்த வழியாகும். இவை ட்ரைகிளிசரைடுகளையும், கெட்ட கொழுப்பையும் குறைப்பதுடன், இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.
எண்ணெய்யில் பொரித்து சாப்பிட்டுவதற்கு பதிலாக நெருப்பில் சமைத்து சாப்பிடுவது சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |