ரெட் கார்ட் வாங்கிய கம்ருதினை கொண்டாடிய மக்கள் - அப்போ பார்வதியின் நிலை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரெட் வாங்கிய கம்ருதினை மக்கள் வரவேற்ற காட்சி தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள் இருந்த நிலையில், ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு தற்போது.
Singappenne: பொங்கல் கொண்டாட்டத்தில் வில்லியாக இறங்கிய அன்புவின் அம்மா... அடுத்து நடக்கவிருப்பது என்ன?
சபரி, அரோரா, விக்ரம், திவ்யா என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். பிக் பாஸில் டாப் 5 போட்டியாளரான கம்ருதீன் மற்றும் பார்வதி இருப்பார்கள் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் ரெட் கார்ட் பெற்று வெளியேறினார்கள்.

டிக்கட் டு பினாலே சுற்றில் கம்ருதின் மற்றும் பாரு இருவரும் சேர்ந்து சான்ராவை எட்டி எதைத்து காரில் இருந்து தள்ளி விட்டதற்காக அவர்கள் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மக்கள் அனைவரும் அவர்களுக்கு ரெட் கார்ட் கொடுத்தது சரிதான் கொடுக்க தான் வேண்டும் என ஆதரித்தனர். ஆனால் பார்வதி தான் கம்முவையும் ரெட் கார்ட் வாங்க வைத்தார் அவர் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றும் கருத்துக்கள் வெளிவந்தன.
ரெட் கர்ட் கொடுக்கபட்டதன் பின்னர் கம்ருதினுக்கு ஆதரவுகள் அதிகரித்து பார்வதிக்கு ஆறுதல் குறைந்தது. இவர்களுக்கு பிக் பாஸ் மூலமும் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.

கம்ருதீனை கொண்டாடும் ரசிகர்கள்
ஆனால் கம்ருதினை கொண்டாடி வரவேற்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலான நிலையில், கம்ருதீன் முதல் முறையாக வெளியே வந்துள்ளார். அவரை ரசிகர்கள் மாலை அணிவித்து, தலையில் கிரீடம் வைத்து, தூக்கிக் கொண்டாடி உள்ளனர்.
என்னதான் கம்ருதின் பிக் பாஸ் வீட்டில் கெட்ட பெயர் பெற்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் என்பதற்கு இந்த காணொளி ஒரு சாட்சியாக உள்ளது.

ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்ட் பெற்று வெளியேறிய பார்வதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'யாருக்கு ரெட் கார்டு' நான் தான் டைட்டில் வின்னர் என்பது போல பதிவினை வெளியிட்டு இருந்தார்.
அதைப்பார்த்த பலர் இன்னும் நீ திருந்தல, அடங்காதா பாரு என கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். மற்றபடி பார்வதி, வெளியில் வந்தால் ரசிகர்கள் வெச்சு செய்துவிடுவார்கள் என தெரிந்து வெளியில் தலைகாட்டாமல் இருக்கிறார் என பல கருத்துக்கள் வெளியாகி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |