இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் திமிர் பிடித்த நபர்களாம் - இவர்களுடன் ஜாக்கிரதை
எண் கணிதத்தின்படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் சில ஆளுமை திறன்களை கொண்டிருப்பார்கள் அந்த வகையில் சில திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்கள் எனப்படுகின்றது.

எண்கணிதம்
எண் கணிதத்தின்படி, எண் 1 கொண்டவர்கள் அதாவது அவர்கள் பிறந்த திகதியை குட்டி வரும் எண் 1 கொண்டவர்கள் மிகவும் திமிரு பிடித்தவர்கள் எனப்படுகின்றது.
இந்த 1ம் இலக்க எண்ணை ஆளும் கிரகம் சூரியன், எனவே, இந்த நபர்கள் எப்போதும் கம்பீரமானவர்கள் எனப்படுகின்றது.
எந்த மாதத்திலும் 1, 10, 19, அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு எண் 1 இருக்கும். இவர்கள் எண்கணிதத்தில் செல்வாக்கு மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.

அவர்கள் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டார்கள். எல்லாவற்றிலும் தான் முதன்மை இடத்தில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். மேலும் தங்கள் சொந்த விருப்பப்படி வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்களின் வலுவான ஆளுமை தான் மக்களை ஈர்க்கும்.
எண் 1 கொண்டவர்கள், தங்கள் உறவுகளைச் சீர்குலைக்க நேரிட்டாலும், ஒருபோதும் தங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
அவர்கள் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள், ஆனால் மற்றவர்கள் பெரும்பாலும் அவர்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள தான் அதிகமாக முயற்சிப்பார்கள்.

இந்த திகதியில் பிறந்தவர்கள் மிகவும் வெளிப்படையானவர்கள். இதனால்தான் அவர்கள் முடிவெடுப்பதில் மிகவும் விரைவாக செயல்படுகிறார்கள்.
ஆனால் சில சமயங்களில் அவர்களின் அவசரம் தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கக்கூடும். எண் 1 உடையவர்களின் மிகப்பெரிய பலவீனம் அவர்களின் முன்கோபம்.

இது அவர்களின் மனநிலையையும், குடும்ப உறுப்பினர்களின் மனநிலையையும் கெடுத்துவிடும். அவர்களால் தவறுகளையோ பொய்களையோ பொறுத்துக்கொள்ள முடியாது, அதனால் பொறுமையை இழக்கிறார்கள். இதனால் இவர்கள் திமிரு பிடித்தவர்கள் என்று கூறுகிறது எண்கணிதம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |