இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை யாராலும் ஜெயிக்க முடியாதாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவர் பிறந்த ராசியை போன்று நட்சத்திரத்தை வைத்தும் குணயியல்புகளை கணிக்கலாம்.
ஒருவரின் ஆளுமை, பண்புகள் மற்றும் எதிர்காலம் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு தனித்துவமான ஆற்றல் இருக்கும்.
அப்படியாயின், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மீள்தன்மை, மனஉறுதி மற்றும் வெல்ல முடியாத மனப்பான்மை உள்ளிட்டவைகளுக்கு பெயர் போனவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் வாழ்க்கையில் ராசியை போன்று நட்சத்திரங்களும் அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது. வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தோற்கடித்து விட்டு முன்னாள் வரும் நட்சத்திரங்களும் உள்ளன.
அந்த வகையில், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் யாராலும் தோற்கடிக்க முடியாத நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1. பரணி
- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உற்சாகமான மற்றும் சக்திவாய்ந்த ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
- தலைமை பதவிக்குரிய குணம் இயல்பாகவே இருக்கும்.
- சவால்கள் மற்றும் போட்டி நிறைந்த சூழலில் சிறப்பாக செயல்படுவார்கள்.
- சுக்கிரனால் ஆளப்படுவதால் பயமற்றவர்களாக இருப்பார்கள்.
- சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவர்கள் என்பதால் மற்றவர்களிடம் தாங்கி இருக்கமாட்டார்கள்.
2. மகம்
- நிழல் கிரகமான கேதுவால் ஆளப்படுவதால் எந்த சூழ்நிலையையை திறம்படி சமாளிப்பார்கள்.
- இயற்கையான தன்னம்பிக்கை இருப்பதால் எந்தவொரு வேலையையும் துணிந்து செய்வார்கள்.
- மரியாதை மற்றும் பாராட்டைப் பெறும் ஒரு அரச நடத்தை கொண்டிருப்பார்கள்.
- அசைக்க முடியாத மன உறுதியுடன் நடந்து கொள்வார்கள்.
- தங்கள் திறன்கள் மீது வலிமையான நம்பிக்கையையும் கொண்டுள்ளனர்.
- பெரும்பாலும் அவர்களை பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் அதிர்ஷ்டம் வரும்.
3. விசாகம்
- குருபகவானால் ஆளப்படும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தீவிரமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
- பீனிக்ஸ் பறவை போன்று சாம்பலில் இருந்து மீண்டு எழும் உள்ளார்ந்த திறன் கொண்டிருப்பார்கள்.
- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மீள்தன்மை ஒப்பிடமுடியாத அளவுக்கு தைரியம் கொண்டவர்கள்.
- எந்த சவாலையும் சமாளிக்க உதவும் ஆழமான உள் வலிமையைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- திட்டமிடுவதில் சிறந்தவர்களாக இருப்பதால் எதிரிகளை விட சில படிகள் முன்னால் இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).