அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா?
எண்கணித சாஸ்திரத்தின் பிரகாரம், ஒருவருடைய பிறந்த தேதி அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தனிப்பட்ட திறமைகள் மற்றும் குணாதிசயங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.
எண் கணித நம்பிக்கைகளின்படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் இயல்பிலேயே மென்மையான மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் அதிக நம்பகத்தன்மை, இரக்க உணர்வு, பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மற்றும் எளிதில் மற்றவர்களை நம்பும் குணம் ஆகியவற்றைக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், இந்த நல்ல பண்புகளே சில நேரங்களில் அவர்களுக்கு பாதகமாக மாறக்கூடும். குறிப்பாக, சரியான நபர்களை அடையாளம் காணத் தவறுவதாலும், அனைவரையும் நல்லவர்களாகக் கருதும் பழக்கத்தாலும் அவர்கள் தவறான நபர்களை நம்பி ஏமாற்றங்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு மற்றவதர்களை விட அதிகம்.
இவர்களின் இந்த குணம் வாழ்வில் அதிக நம்பிக்கை துரோகங்களை இவர்கள் சந்திப்பதற்கு காரணமாக அமைகின்றது.
அப்படி எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
2, 11, 20, 29 (கூட்டு எண் – 2)

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மனதின் காரகரான சந்திர பகவானின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள். இயல்பிலேயே மென்மையான மனம், அதிக உணர்ச்சிவசப்படுதல் மற்றும் சிறந்த கற்பனைத் திறன் ஆகியவை இவர்களின் முக்கிய பண்புகளாக இருக்கும்.
இவர்கள் பிறரை எளிதில் நம்பும் குணம் கொண்டவர்கள். யாரேனும் துன்பத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால், அதிகம் யோசிக்காமல் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
ஆனால் இவர்களின் இந்த நல்ல மனதையும், இரக்க குணத்தையும் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே வாழ்வில் அதிக ஏமாற்றங்களையும் மனவேதனைகளையும் சந்திக்க நேரிடும்.
7, 16, 25 (கூட்டு எண் – 7)

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கேது பகவானின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். ஆன்மீக சிந்தனை, தனிமையை விரும்பும் மனப்பான்மை மற்றும் ஆழமான சிந்தனை ஆகியவை இவர்களின் தனிச்சிறப்புகளாகும்.
பெரும்பாலும் தங்களது சிந்தனை உலகிலேயே மூழ்கி இருப்பதால், தங்களைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான குணாதிசயங்களை சரியாக மதிப்பிடத் தவறிவிடுவார்கள்.
குறிப்பாக கூட்டுத் தொழில், வணிகப் பங்காளிகள் அல்லது மிக நெருங்கிய நண்பர்கள் மூலம் ஏமாற்றங்கள் மற்றும் நம்பிக்கைத் துரோகங்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம்.
8, 17, 26 (கூட்டு எண் – 8)

இந்த தேதிகளை சனி பகவான் ஆட்சி செய்கிறார். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள், பொறுப்புணர்வு மிக்கவர்கள் மற்றும் நேர்மையை உயர்வாகக் கருதுபவர்களாக இருப்பார்கள்.
சனி பகவானின் ஆதிக்கம் காரணமாக, இவர்களின் வாழ்க்கைப் பயணம் பெரும்பாலும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனாலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் நேர்மையை பலரும் பயன்படுத்தி தங்களின் காரியங்களை சாதித்துக்கொள்வார்கள்.
வெற்றியை அடைய பல தடைகளைத் தாண்டி, கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இவர்களின் நேர்மையையும் நல்ல மனதையும் புரிந்து கொள்ளாமல், இவர்களிடம் உதவி பெற்றவர்களே பின்னர் எதிரிகளாக மாறும் சூழ்நிலை இவர்ளுக்கு அடிக்கடி உருவாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |