சம்பாதிச்ச பணத்தையெல்லாம் முத்து சிற்பி என்ன செய்தார் தெரியுமா? அதிர்ந்து போன சூப்பர் சிங்கர் அரங்கம்... கதறிய பாடகர்!
மேடை நாடகங்களில் பாடிக்கொண்டிருந்தவர் முத்துசிற்பி. தற்போது விஜய் டிவி சூப்பர் சிங்கரில் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் பாடி வருகிறார். கனீர் குரலால் எப்பேற்பட்ட ராகத்தையும் சுரத்தையும் தன் சுதியால் வளைத்து பாடும் முத்துசிற்பிக்கு ரசிகர்களும் ஏராளாம் இருந்தனர்.
அவர் விஜய் தொலைக்காட்சியில் பாடியதைத் தொடர்ந்து உலகம் முழுவதில் இருந்தும் இன்னும் அவருக்கு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர்.
நீங்க Great sir! ?
— Vijay Television (@vijaytelevision) March 5, 2021
சூப்பர் சிங்கர் - வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #SuperSinger #FolkRound #VijayTelevision pic.twitter.com/QrkRUtIA8C
இந்நிலையில் வரும் வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு விருந்தினர்களான நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் நடிகர் ரியோ உள்ளிட்டோர் அமர்ந்திருந்த அந்த அரங்கில் முத்துசிற்பி பாட்டு பாடி முடித்தபின்னர் ஒரு விஷயம் சொன்னார்.
அதில், தான் நாடகத்தில் பாடி சம்பாதித்த பணத்தையெல்லாம் முதலீடாக போட்டு சில ஆல்பம் பாடல்களை செய்ததாக அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னவுடனேயே ரம்யா நம்பீசன் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறார்.
பின்னர், “வெகுசிலர் மட்டும் தான், தாங்கள் கலைகள் மூலம் சம்பாதித்த பணத்தை கலைகளிலேயே முதலீடாக்குவார்கள். நீங்கள் ஒரு ஆத்மார்த்தமான கலைஞர்” என்று முத்துசிற்பியை பார்த்து ரியோ கூற, முத்துச்சிற்பி கண்கலங்குகிறார்.