உங்களுக்கு எந்த வகை சருமமாக இருந்தாலும் கடலை மா இருந்தா போதும்
சருமம் எந்த வகையாக இருந்தாலும் அதற்கு கடலை மாவை பயன்படுத்தும் போது கூடிய பலன்களை தரும் என அழகு நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடலை மாவு
கடலை மாவு பொதுவாக சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள உதவும். இது சருமத்தை சுத்தப்படுத்துகிறது.
நாம் கடைகளில் விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் நம்மை பளீச் என்று மாற்றினாலும் அது பின்விளைவை ஏற்படுத்தும்.
இது சருமத்திற்கு சிறந்த ஃபேஸ் பேக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த கடலை மாவை முல்தானி மெட்டியுடன் சேர்த்து எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் பயன்படுத்த முடியும்.
வறண்ட சருமத்தை கொண்டவர்கள் கடலை மாவுடன் வாழைப்பழங்களை சேர்த்து பயன்படுத்த முடியும்.
கூட்டு சருமம் கொண்டவர்கள் அதாவது எண்ணெய் மற்றும் வறண்ட சருமம் இரண்டும் ஒன்றாக சேர்ந்ததாகும்.
இந்த சருமம் கொண்டவர்கள் கடலை மாவுடன் கற்றாழை சேர்த்து பயன்படுத்தும் போது சருமம் பொலிவை திரும்ப கொண்டு வரும்.
இந்த பதிவில் கூறியது போல் சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமத்தின் அழகை பாதுகாப்பதுடன் பருக்கள் வராமலும் தடுக்க கூடியது.