5 நிமிடத்தில் மணமணக்கும் சுவையான வேர்க்கடலை சட்னி- செய்வது எப்படி?
பலருக்கும் சாப்பிடும் தோசை, இட்லி போன்ற உணவுகளுடன் தொட்டுக்க சட்னியை சேர்த்துக்கொள்ள ரொம்பவே பிடிக்கும், அதிலும் வேர்க்கடலை சட்னி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து உண்பார்கள்..
அந்த வகையில் மணமணக்கும் சுவையான வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை - 1 கப்
- பூண்டு - 4 பல்
- புளி - சிறிதளவு
- தேங்காய் - சிறிதளவு
- வர மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க
- நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு,
- சீரகம் - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் காய்ந்த வேர்க்கடலையை ஒரு சூடான வாணலியில் இட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வேர்க்கடலை வாசம் நன்றாக வரும் வரை வறுக்கவும்.
தீய்த்துவிட வேண்டாம். பிறகு வேர்க்கடலை ஆறவைக்கவும். அதன்பின்னர், ஆறிய வேர்கடலை, வர மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.

பின் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை சட்னியில் போட்டு கலந்து விடவும்.
கெட்டியான வேர்கடலை சட்னி தயார். இவை இட்லி, தோசை, சாதம், பழைய கஞ்சி இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.