மயில் விடும் 6 சொட்டு கண்ணீர் குறித்து தெரியுமா? துடிதுடித்து இறக்கும் கடைசி தருணம்
மயில்கள் இறக்கும் போது நிகழும் சுவாரசியமாக கதையினை இப்போது தெரிந்து கொள்வோம்.
மயில்
பொதுவாக பறவைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது என்றால் அது மயில் தான்.
மயில் ஆன்மீக ரீதியில் முருகக்கடவுளின் வாகனம் என்றும், இந்தியாவின் தேசிய பறவையாகவும் உள்ளது. மயில் தனது தோகையை விரித்து ஆடும் காட்சி பார்வையாளர்களை மெய் சிலிர்க்கவே வைக்கும்.
ஆனால் இவ்வாறு மனிதர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மயில்கள் இறப்பை யாராவது அவதானித்ததுண்டா? அல்லது அந்த நிகழ்வைக் குறித்து அறிந்ததுண்டா?
பெரும்பாலான நபர்களின் பதில் என்னவென்றால் இல்லை என்பதாகவே இருக்கும். தற்போது மயில்களின் இறப்பு குறித்த ஆச்சரியமான உண்மைகளை தற்போது தெரிந்து கொள்வோம்.
மயில்களின் இறப்பு எப்போது?
இயற்கையாக மயில்கள் தனக்கு வயதாகிவிட்டால் தனது மரணத்தை 48 நாட்களுக்கு முன்பே கணித்துவிடுமாம். அதாவது இறக்கும் நாள், நேரம், நோடி ஆகியவற்றை துள்ளியமாக தெரிந்து கொள்ளும் மயில், அந்த நொடியில் மலை மீதுள்ள ஏதாவது ஒரு முருகன் கோவிலில் மறைவான இடத்தினை தேர்ந்து எடுக்கவும்.
ஒரு வேளை உணவு, சிறிது தண்ணீர் மட்டும் அருந்தி “மயில் துயில்” என்னும் விரதத்தை கடைபிடிக்கும். கடைசியாக ஒரு வாரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் அமர்ந்துவிடுமாம்.
அது இறப்பதற்கு முதல் நாள் மட்டும் ஒரு பசுவின் கோமியத்தை 7 சொட்டு அருந்தும். அப்பொழுது அதன் கண்கள் வேர்த்து 6 சொட்டு கண்ணீர் துளிகள் பத்திரமாக ஒரு பாறை பிளவுக்குள் விடுமாம்.
அப்பொழுது பாறை பிளந்து கொள்ளும் நிலையில், மயில் அந்த பாறை இடுக்கில் அமர்ந்து கொண்டு தனது தோகையை விரிக்கும். ஆனால் குறித்த பாறையும் மயிலை நெருக்க அந்த முழுநாளும் மயில் ஓம் முருகா என்று சொல்லிக் கொண்டே தனது உயிரை விடுமாம்.
தோகை இல்லாத பெண் மயில்கள் தனது கண்ணீரை வேல மரத்தின் மீது விட்டு அது பிளந்ததும் இதே போன்று உயிரைவிடுமாம்.
வெள்ளை நிற மயில்கள் மட்டும் அக்கோவிலுள்ள முருகன் கையில் இருக்கும் வேலில் பறந்துவிழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளுமாம். அவ்வாற இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி மலர் மாலையாக மாறி முருகனின் காலில் விழுவதாகவும் கூறப்படுகின்றது.
இதில் 48 தினங்கள் = 1 மண்டலம், 7 சொட்டு கோமியம் = ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக் கண்ணீர் = அறுபடைவீடு, செவ்வரளி = முருகனின் பூ, வேல மரம் = வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம் = யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது.
இதனால் தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனின் வாகனமாக மட்டுமின்றி தேசிய பறவையாகவும் இருக்கின்றதாம். தனது மரணத்தை கூட எந்தவொரு உயிருக்கும் தொந்தரவு இல்லாமல் அமைதியாக எந்த உயிருக்கும் இடையூறு இல்லாமல் விரதம் இருந்து உயிர் துறக்கின்றது.
விபத்தில் இறக்கும் மயில்கள்
அதுவே விபத்திலோ, பிற காரணங்களால் அடிபட்டு இறக்கும் மயில்களை, சக மயில்கள் பாம்பு புற்றின் அருகே இழுத்து சென்று விட்டுவிடுமாம்.
பின்பு புற்றுக்குள் தள்ளி உடல் மூடப்படும் என்று கூறப்படுகின்றது. இந்த உண்மையை மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய மயில் அகவல் என்னும் நூலில் காணப்படுவதாக விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது மயில்சாமி சித்தர் உச்சி வெயிலில் பழனி மலையுச்சிக்கு சென்று, அங்கு ஒரு மொட்டைப் பாறையில் தனது ஒற்றைக் காலில் நின்று கடும் தவமிருந்து முருகனிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து நோன்பிருந்து இறக்கவேண்டும். அதன் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பவையாகும் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |