மயிலுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் அரங்கேறும் சண்டை! சிரிப்பை அடக்கமுடியாத காட்சி
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
காட்டு விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. இதன் காரணம் இவற்றுக்கு இருக்கும் வித்தியாசமான ஸ்டைலாகும். சில நேரங்களில் விலங்குகள் மோதிக்கொள்வதையும், சில நேரங்களில் கொஞ்சிக்குலாவுவதையும் நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம்.
விலங்குகளின் வேறுபட்ட பாணிகள் மனிதர்களை மயக்கி விடுகின்றன. தற்போது வெளியாகியுள்ள காணொலியிலும், இப்படி ஒரு காட்சி காணப்படுகின்றது. இதில் ஒரு ஆடு மற்றும் ஒரு மயிலைக் காண்கிறோம்.
இந்த வீடியோ-வில் ஆட்டுக்கும் மயிலுக்கும் இடையில் வேடிக்கையான சண்டை ஒன்று நடக்கிறது. மயிலும் ஆடும் மாறி மாறி ஒன்றை ஒன்று தாக்குவது பார்ப்பதற்கு வினோதமாக இருக்கிறது.
பொதுவாக சிங்கம், சிறுத்தை, யானை, நாய் போன்ற விலங்குகள் மட்டுமே சண்டையிடும். ஆனால் ஆடு வேறு எந்த மிருகங்களுடனும், பறவைகளுடனும் மோதியதை பெரும்பாலும் நாம் பார்த்திருக்க மாட்டோம்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் ஒரு ஆடும் மயிலும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. பின்னர் இரண்டுக்கும் இடையே சண்டை தொடங்குகிறது. ஆடு தன் கொம்பினால் மயிலைத் தாக்குகிறது. மயிலும் காற்றில் பறந்து வந்து ஆட்டை பாடாய் படுத்துகிறது.
ஆடு மற்றும் மயிலின் இந்த சண்டை வீடியோ பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இதை பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.