நிம்மதியா வாழணுமா? இந்த நபர்களுடன் பழகாதீங்க... சாணக்கியர் நீதி
ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.
இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நீதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் சாணக்கியர் கூறுகிறார் வாழ்க்கையில் நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் சிலரை வாழ்க்கையை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என கூறுகிறார்.

சாணக்கிய நீதி
பொறாமை கொண்டவர்கள்
- ஆச்சார்ய சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தின்படி, ஒரு மனிதன் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு பொறாமை மற்றும் சுயநலம் கொண்ட நபர்களுடன் பழக கூடாது.
- எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் கூட, அத்த நபர்களிடம் ஒருபோதும் உதவி கேட்கக்கூடாது காரணம் அத்தகையவர்கள் பேராசை மற்றும் பொறாமை காரணமாக உங்களுக்குத் தீங்கு விளைவிப்பார்கள்.
- உண்மையில், பொறாமை குணம் கொண்டவர்களால் சரி எது தவறு எது என்பதைப் பிரித்து பார்க்க முடியாது. மற்றவர்களின் முன்னேற்றம் மற்றும் வெற்றியைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்.
- மாறாக அவர்களின் மகிழ்ச்சியை கெடுக்க திட்டமிடுவார்கள். தீய மற்றும் சுயநல குணம் கொண்டவர்கள் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்பட்டு, அவர்களுக்குத் தீங்கு செய்ய விரும்புகிறார்கள்.
சுயநலவாதிகள்
- அகங்காரம் கொண்ட முரட்டுத்தனமானவர்ள் சுயநலம் கொண்டவர்கள். இவர்களை கண்மூடித்தனமாக நம்ப கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் அறிவுறுத்துகிறார். காரணம் அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் எந்த நன்மையையும் செய்ய மாட்டார்கள். அதற்கு மாறாக ஆபத்தை மட்டுமே கொடுப்பார்கள்.
- ஒரு எதிரி முன்பிருந்து தாக்குவான், எனவே அவர்களின் தாக்குதலைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆனால், இரக்கமற்ற மற்றும் சுயநலவாதிகள் பின்னாலிருந்து தாக்குகிறார்கள்.
- அத்தகைய நபர்கள் நம்புவதற்குத் தகுதியற்றவர்கள். சுயநலவாதிகள் வாழ்க்கையில் தங்கள் சொந்த நலன்களை மட்டுமே கருத்தில் கொள்வார்கள்.
முன்கோபக்காரர்கள்
- முன்கோபம் கொண்ட ஒருவரை ஒருபோதும் நம்பவோ, அவர்களிடம் உதவி கேட்கவோ கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். மனிதனின் மிகப்பெரிய எதிரி கோபம்தான். கோபம் ஒருவரின் பகுத்தறியும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனைப் பாதிக்கும்.
- முன்கோபமுள்ள ஒருவர் தன்னையும் மற்றவர்களையும் உடலளவிலும், மனதளவிலும் காயப்படுத்துகிறார்கள். கோபம் ஒருவரைச் சரி தவறைப் பற்றி சிந்திக்க செய்யாது, தனது சொந்த திருப்தியில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கிறது.
- இத்தகைய நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஒருபோதும் நெருங்கக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).