பெரும் சரிவை சந்தித்த Paytm: கண்கலங்கி அழுத நிறுவனர்
இன்றைய டிஜிட்டல் சேவையில் பேடிஎம்(Paytm) முக்கிய அங்கமாக இருந்து வரும் நிலையில், இதன் நிறுவனர் விஜய் கேசர் சர்மா தற்போது கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இதற்கு காரணம் என்னவெனில் பேடிஎம் நிறுவன பங்குகள் பாரிய சரிவைக் கண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் வளர்ச்சி அதிகரித்திருந்த நிலையில், இதன் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி பங்குகளை வெளியிட்டிருந்தது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம், குறித்த நிறுவனம் 8,300 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டின் மூலமும், மீதம் உள்ள 10,000 கோடி ரூபாய் அதன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளார்களிடம் இருந்தும் விற்பனை செய்தும் மொத்தமாக 18300 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பங்கு சந்தையில் இன்று வெளியான பட்டியலில், சரிவைக் கண்டுள்ளது. காரணம் பேடிஎம் ஒரு பங்கின் மதிப்பு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதிகபட்சமாக 27 சதவீதம் வரை பங்குகள் சரிந்துள்ள நிலையில், பேடிம் பங்குகள் வாங்கிய முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பங்குகள் பட்டியலிடப்படும் நிகழ்வில், பேடிஎம் நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மாவும் கலந்து கொண்ட நிலையில், இவ்வாறு அதிரடியாக சரிவைக் கண்டுள்ளதால் கண்ணீர் விட்டுள்ளார்.
அவர் கண்ணீர் விட்டதும் தனது கைக்குட்டியால் துடைத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
