நான் தற்கொலை செய்துக் கொண்டு இறந்தால் அதற்கு காரணம் இவர்கள் தான்: கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!
பிரபல நடிகையொருவர் தான் தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது மாரடைப்பால் உயிரிழந்தாலோ அதற்கு காரணம் இவர்கள் தான் என கடிதம் எழுதி நடிகை பாயல் கோஷ் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
பாயல் கோஷ்
தெலுங்கு, கன்னடம், இந்தி, மற்றும் தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் 33 வயதான நடிகை பாயல் கோஷ்.
இவர் சினிமாவில் மட்டுமல்ல அரசியல் வாதியாகவும் இருந்து வருகிறார். மேலும், பாயல் கோஷ் ஹிந்தியில் படேல் கி பஞ்சாபி ஷாதி, பிராயணம், ஆகிய படங்களிலும், தமிழில் தேரோடும் வீதியிலே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முன்னதாக பிரபல பொலிவூட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகாரும் கொடுத்திருந்தார்.
தற்கொலைக் கடிதம்
இந்நிலையில், நடிகை பாயல் கோஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், “நான் திடீரென, தற்கொலை செய்து கொண்டு இறந்தாலோ அல்லது எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றாலோ அதற்கு இவர்கள் தான் காரணம்” எனக் கடிதம் மூலம் பதிவிட்டிருக்கிறார்.
மேலும், இவர் இந்தக் கடிதத்தில் யாருடைய பெயரையும் குறிப்பிடப்படவில்லை.
இதனைப் பார்த்த இணையவாசிகள் அவருக்கு ஆறுதாலாக பேசி வருகிறார்கள்.