அமீர் பாவனி திருமணம்! புகைப்படத்தை வெளியிட்டு பாவனி அவிழ்த்த உண்மை: அமீருக்கு என்ன ஆச்சு?
பாவனி வெளியிட்ட பதிவினால் அமீருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அமீர் மற்றும் பாவனி
நடன இயக்குநரான அமீர் பிக்பாஸ் சீசன் 5ல் பாவனியின் பின்னே சென்று அவரை காதலிப்பதாக கூறி காதல் டார்ச்சர் கொடுத்த அமீர் தற்போது பிபி ஜோடி நிகழ்ச்சியில் ஜோடியாக கலக்கி வருகின்றனர்.
அமீர் ஆரம்பத்திலேயே காதலைக் கூறிய நிலையில், பாவனி தனது காதலை தெரிவிக்காமல் இருந்தார். பின்பு சில புகைப்படங்கள், பதிவுகளைக் கொண்டு தனது காதலை மறைமுகமாக கூறினார்.
சமீபத்தில் பிபி ஜோடி நிகழ்ச்சியில் இருவரும் அட்டகாசமாக நடனமாடிய நிலையில், திருமணமும் நடைபெற்றது. குறித்த திருமணம் நடன நிகழ்ச்சிக்காக நடைபெற்றிருந்தாலும், ரசிகர்கள் பெரும் குஷியில் காணப்பட்டனர்.
அமீருக்கு என்ன ஆச்சு?
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலேயே அமீர் கால் பிரச்சனையாகவே இருந்த நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வுக்காக ரொம்பவே சிரமப்பட்டு தொடர்ந்து கஷ்டமான ஸ்டெப்புகளை கொரியோகிராஃப் செய்து நடனமாடி வந்தார்.
அந்த நிகழ்ச்சியின் போது அமீர் காலில் பிரச்சனை இருந்ததாகவும், அதையும் தாண்டி அவர் நடனமாடினார் என தற்போது பாவனி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை பதற வைத்துள்ளது.
ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றால் அமீர் ரெஸ்ட் எடுத்திருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் எழுந்து நிற்கும் உன் மனசுக்குத்தான் உன்னை எல்லாரும் லவ் பண்றாங்க என பதிவிட்ட நிலையில், மறைமுகமாக தனது காதலையும் பாவனி வெளிப்படுத்தி உள்ளாரா? என்கிற கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தையும், மருத்துவ ரிப்போர்ட்டையும் ஷேர் செய்துள்ளார் பாவனி.
இதனை அவதானித்த ரசிகர்கள் அறிவுரை கூறி வருவதுடன், தங்களது அக்கறையையும் வார்த்தையால் வெளிப்படுத்தி வருகின்றனர்.