பாவனியின் ஆட்டம் ஆரம்பம்! அடிமையான தாமரை... பிக் பாஸில் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்!
பிக்பாஸ் வீட்டில் ஐந்து காயின்கள் ஐந்து போட்டியாளர்களிடம் இருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு காயினுக்கு சக்தி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த காயின் வைத்திருப்பவர்கள். வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களிடம் பல்வேறு நிபந்தனைகள் விதித்து வருகின்றனர்.
இந்த வாரம் ஆகாயத்தின் நாணயத்தை வைத்திருக்கும் பவானிக்கு வீட்டை ஆளும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் இடியும் மின்னலும் அவ்வபோது இங்கே உருவாகும் அப்படிப்பட்ட ஆகாயத்தின் நாணயத்தை வைத்திருக்கும் பவானிக்கு இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பவானி தாமரையை தன்னுடைய உதவியாளராக தேர்வு செய்தார். சனிக்கிழமை கமலின் முன்னிலையிலேயே பவானி மற்றும் தாமரை வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், எலியும் பூனையுமாக இருக்கும் இவர்கள் இருவரும் எப்படி இணைந்து செயல்பட போகிறார்கள் என்பதை பொருந்திருந்து பார்ப்போம்.