புற்றுநோயால் குரலை இழந்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜஸ்ரீ ஜெய்சன்! வைரலாகும் உருக்கமான வீடியோ
எப்போதும் தன்னம்பிக்கையையும், வாழ்க்கை நம்பிக்கையையும் விதைக்கும் வீடியோக்களால் அறியப்படும் பட்டிமன்ற பேச்சாளர் ராஜஸ்ரீ ஜெய்சன், இந்த முறை கண்கலங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆயிரக்கணக்கானோரின் மனதை உருக வைத்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நான்காம் நிலை புற்றுநோயுடன் போராடி வந்ததை வெளியில் காட்டாமல், சிரித்த முகத்துடன் பிறருக்கு உற்சாகம் அளித்து வந்த அவர், தற்போது குரலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

வைரலாகும் காணொளி
"நான் வாயைத் திறந்தால் குரலுக்கு பதிலாக காற்றுதான் வருகிறது. குழந்தைகள் 'எப்போது பழைய மாதிரி பேசுவீர்கள்?' என்று கேட்கும்போது மிகவும் வலிக்கிறது" என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதுவரை தனது வலியை மறைத்து வாழ்ந்ததாக கூறிய ராஜஸ்ரீ, இனி அதை மனதில் வைத்திருக்க முடியாததால் இந்த வீடியோவை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நடிகைகள் அனிதா சம்பத், ரேகா உள்ளிட்ட பலரும், ஏராளமான ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து, விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருவதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |