பட் கம்மின்ஸ் தாயார் உயிரிழந்தார்... சோகத்தில் ரசிகர்கள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் தாயார் இன்று உயிரிழந்தார்.
திடீரென நாடு திரும்பிய கேப்டன் பட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது.
இத்தொடரின் முதல் டெஸ்ட்டில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் திடீரென்று தனது சொந்த நாட்டுக்கு அவசர, அவசரமாக சென்றார்.
இதனையடுத்து, இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த மார்ச் 1ம் தேதி இந்தூர் நகரில் நடந்தது. ஆனால், பட் கம்மின்ஸ் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. கடைசி 4-வது டெஸ்ட் போட்டிக்கும் அவர் இந்தியா திரும்பவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினர்.
பட் கம்மின்ஸ் தாயார் உயிரிழந்தார்
இந்நிலையில், வீரர் பட் கம்மின்ஸின் தாயார் மரியா கம்மின்ஸ் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட இருக்கின்றனர்.
Our deepest condolences to Pat Cummins and his family after the passing of his mother Maria. pic.twitter.com/rmlL9xSDvf
— ICC (@ICC) March 10, 2023