திருடனை 10 கி.மீ ரயிலின் வெளியே தொங்கவிட்ட பயணிகள்: வைரலாகும் வீடியோ
ரயிலின் வெளிபுறத்திலிருந்து பயணியின் செல்போனை திருடமுயன்ற நபரை, பயணிகள் ரயிலின் வெளியே தொங்கவிட்ட சம்பவமொன்று சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பெகுசராரி எனும் நகரில் இருந்து காகாரியா என்ற நகருக்கு பயணிகள் ஏற்றிச்செல்லும் ரயிலொன்று “சஹேப்புர் கமல்” என்ற ரயில் நிலையத்தில் நின்று, பின்னர் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
அப்பொழுது அதில் பயணித்த பயணி ஒருவரின் செல்போனை பிளாட்பார்மில் நின்ற ஒரு திருடன் ஒருவன் ஜன்னலுக்குள் கை விட்டு திருட முயன்றுள்ளார்.
Bihar's Spiderman thief snatches phone from moving train
— kulwinder kaur Mohabbat (@kulwinder28696) September 15, 2022
मोबाइल चोरी करना पढ़ा भारी, सवारियो ने खिड़की से दबोचा #thief #theft #crime #investigation #runningtrain #bihar #SpiderMan #Spidermanthief #snatching pic.twitter.com/osw7L7m7Q9
இதனை அறிந்த பயணி உடனே அந்த நபர் செல்போனை எடுக்க வந்த கையை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார். இதனைதொடர்ந்து திருடன் கையை எடுக்க முயன்ற நிலையில், பயணி திருடனின் கையை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார்.
திருடன் பலமுறை கையை விடுமாறு கெஞ்சியும் பயணிகள் அவரின் இரு கைகளையும் கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளனர்.
சுமார் 10 கிலோமீட்டர் ரயில் கடந்த நிலையில், வெளியே தொங்கியபடி வந்த அந்த திருடனை அடுத்த ரயில்நிலையம் வந்த பின்னர் பயணிகள் கையை விடுவித்துள்ளனர்.
இதனையடுத்து திருடன் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.