மன அழுத்தத்தை குறைக்கும் பாசிப்பருப்பில் மொறு மொறு போண்டா... எப்படி செய்வது?
பொதுவாகவே ஏனைய பருப்பு வகைகளை போல்,பயத்தம் பருப்பு, அதாவது பாசிப்பருப்பும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
பாசிப்பருபில் புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை செரிந்து காணப்படுவதால், அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடிவதுடன், வாயு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பருப்பு ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது. மனஅழுத்தத்தை குறைப்பதில், பாசிப்பருப்பு பெரும் பங்கு வகிக்கின்றது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பாசிப்பருப்பை கொண்டு வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைவில் விரும்பி சாப்பிடும் வகையில் மொறு மொறு சுவையில், பாசிப்பருப்பு போண்டா எப்படி எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்ககலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 1/2
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - அரை இன்ச்
மல்லி விதை - 1 தே.கரண்டி
வேர்க்கடலை - 2 தே.கரண்டி
உப்பு - 1 தே.கரண்டி
செய்முறை
இந்த செசிபியை செய்வதற்கு குறைந்தது ஒருமணி நேரத்துக்கு முன்னர் பாசிப்பருப்பை தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து , பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சியை துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாசிப்பருப்பு நன்றாக ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸி ஜாரிற்கு மாற்றி அதனுடன் மல்லி விதை, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சற்று கொராரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், உடைத்த வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரியவிட்டு எடுத்தால் அவ்வளவு தான் ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த பாசிப்பருப்பு போண்டா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
