பஞ்சை கொடுத்து பத்த வச்ச பிக் பாஸ்.... நேருக்கு நேராக மோதிய தாமரை - பிரியங்கா!
பிக்பாஸ் சீசன் 5 ன் எட்டாவது வாரத்தின் முதல் நாளான இன்று, துவக்கத்திலேயே இந்த வார வீட்டின் தலைவரை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடத்தப்பட்டது. பருத்தி வீரன் என இந்த டாஸ்கிற்கு பெயரிடப்பட்டது.
கடந்த வாரம் நடத்தப்பட்ட உள்ளதை காட்டும் கண்ணாடி டாஸ்கில் வெற்றி பெற்ற 6 பேர் இந்த டாஸ்கில் பங்கேற்பார்கள் என பிக்பாஸ் கூறி இருந்தார்.
இதன்படி ராஜு, தாமரை, வருண், இமான் அண்ணாச்சி, அக்ஷரா, அபினய் ஆகிய 6 பேர் இந்த தலைவருக்கான டாஸ்கில் போட்டியிட்டனர். இந்த டாஸ்கில் கார்டன் ஏரியாவில் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்தன.
போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பெட்டி வழங்கப்பட்டது. டாஸ்க் பஸர் அடித்ததும், போட்டியாளர்கள் தங்களின் பெட்டிகளில் பஞ்சை முடிந்த அளவிற்கு நிரப்ப வேண்டும்.
அந்த சுற்றில் பஞ்சுகளின் எடையின் அடிப்படையில் போட்டியாளர்கள் வரிசைபடுத்தப்பட்டு, குறைந்த அளவிலான பஞ்சு வைத்திருக்கும் இரண்டு நபர்களை தேர்வு செய்ய வேண்டும்.
அவர்களின் யாருக்கு தலைவராக தகுதியில்லை என மற்ற ஹவுஸ்மேட்கள் பேசி முடிவு செய்து, அவர்களுக்கு கிடைக்கும் ஆதரவின் அடிப்படையில், குறைந்த ஆதரவை பெற்ற நபர், ரிஜக்டட் என முத்திரை குத்தி வெளியேற்றப்படுவார்.
இந்த முறை ஒவ்வொரு சுற்றுக்களாக நடத்தப்படும். இறுதி வரை யார் நிலைத்து நிற்கிறாரோ அவரே இந்த வார தலைவராக தேர்வு செய்யப்படுவார் என பிக்பாஸ் தெரிவித்தார். இதற்கு எடை மேலாளராக நிரூப் இருப்பார் என கூறப்பட்டது.
இந்த டாஸ்கின் முதல் சுற்றிலேயே தாமரை வெளியேற்றப்பட்டார். தாமரை தலைவராவதற்கு பிரியங்கா நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தார். அதே சமயம் மற்றவர்கள் தாமரைக்கு ஆதரவு அளித்தனர்.
தலைவராக உனக்கு தகுதியில்லை என பிரியங்கா நேரடியாக சொன்னதால், தாமரை - பிரியங்கா இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.