மலச்சிக்கலைப் போக்கும் பருத்திப் பால் பாயாசம் - செய்வது எப்படி?
பருத்தி பால் என்பது பருத்தி விதைகளிலிருந்து அரைத்து எடுக்கப்படும் பாலாகும். இந்தப் பருத்திப்பால் உடலுக்கு தேவையான ஆற்றலையும், உடல் வலிமையையும் கொடுக்கக்கூடியது.
பருத்தி பாலில் வைட்டமின், புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் நிறைய அடங்கி இருக்கின்றன. அதில், நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. மேலும், மலச்சிக்கல் பிரச்சினையை போக்கும்.
சரி பருத்தி பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள்
பருத்தி விதைகள் - 200 கிராம்
வெல்லம் - 1 கோப்பை
ஏலக்காய் - 5 தேங்காய்
பால் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1/4 தேக்கரண்டி
உலர் இஞ்சி தூள் - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - தேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பருத்தி விதைகளை போட்டு 4-5 முறை நன்றாக கழுவி அதில் இருக்கும் பருத்தியை அகற்ற வேண்டும். அந்த பருத்தி விதைகளை இரவில் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலை, பருத்தி விதைகளை நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு தண்ணிர் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு, ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையை ஊற்றி பருத்தி பாலை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு அகன்ற பாத்திரத்தில் பருத்தி பாலை ஊற்றி மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவில் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், வெந்துக்கொண்டிருக்கும் பருத்தி பாலில் கரைத்த அரிசி மாவை ஊற்றி நன்றாக கிளற வேண்டும்.
பிறகு, அந்த பருத்தி பாலில் அரைத்த ஏலக்காய், உலர்ந்த இஞ்சித்தூள் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பருத்தி பால் கெட்டியானதும், தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். சுவையான பருத்தி பால் பாயாசம் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |