நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பருப்பு ரசம்! செய்வது எப்படி?
தமிழர்களின் விருந்தில் ரசத்துக்கு முக்கிய இடமுண்டு, செரிமானத்தை சீராக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என ரசத்தின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த பதிவில் சுவையான பருப்பு ரசம் செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - கால் கப்
புளி- நெல்லிக்காய் அளவு
பழுத்த தக்காளி- 2
சீரகம்- ஒரு டீஸ்பூன்
மிளகு- ஒரு டீஸ்பூன்
பூண்டு- 5
கடுகு- கால் டீஸ்பூன்
வெந்தயம்- 10 முதல் 12
காய்ந்த மிளகாய்- 2
ரசப்பொடி- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை
கால் கப் துவரம் பருப்பை நன்றாக சுத்தம் செய்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியை சுமார் 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து எடுக்கவும். புளியை கரைத்து புளி தண்ணீர் எடுத்துக் கொள்ளவும், தக்காளி ஒரு பவுலில் மசித்து வைத்துக் கொள்ளவும்.
சீரகம், மிளகு மற்றும் பூண்டு தட்டி எடுத்துக் கொள்ளவும், மிக்ஸி ஜாரில் போட்டு கூட ஒன்று இரண்டாக அரைக்கலாம்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊறி சூடானதும், கடுகு, வெந்தயம் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பூண்டு- மிளகு- சீரக கலவை சேர்க்கவும்.
இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து தக்காளி சேர்க்கவும். ஒரு தடவை கலந்து விட்ட பின்னர் வேக வைத்து பருப்பு கலவை, புளி தண்ணீர் சேர்க்கவும்.
கடைசியாக ஒரு டீஸ்பூன் அளவுக்கு ரசப்பொடி சேர்த்துக் கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு ஒரு கொதி வரவிடவும், தேவையெனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக கொத்தமல்லி இழைகளை தூவினால் பருப்பு ரசம் தயாராகிவிடும்!!!