ஓட்டல் ஸ்டைலில் பருப்பு குழம்பு...இப்படி ஒருமுறை செய்தால் இனி அடிக்கடி செய்வீங்க!
ஓட்டல் சுவையில் பருப்பு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இந்த பருப்பு குழம்பை இட்லி, தோசைக்கு மட்டும் இல்லை சுட சுட சாதத்துடனும் வைத்து சாப்பிடலாம்.
2022 சனி வக்ர பெயர்ச்சி - 141 நாட்கள் இந்த 5 ராசியும் அவசரப்படாதீங்க...பேரழிவு காத்திருக்கின்றது?
வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- பெருங்காயம்
- உப்பு
- எண்ணெய்
- மஞ்சள் தூள்
- கடுகு
- சீரகம்
செய்முறை
முதலில் குக்கரில் தேவையான அளவு பருப்புடன் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம் , மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்.
பருப்பு வெந்ததும் அதை மசித்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
முடி வளர்ச்சியை மின்னல் வேகத்தில் துண்டும் சின்ன வெங்காய சட்னி...5 நிமிடத்தில் தயாரிக்கலாம்!
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
இப்போது அதில் மசித்த பருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் பருப்பு குழம்பு தயார்.
குழந்தைகளுக்கு செய்யும் போது மட்டும் காரத்தை சற்று குறைத்து கொள்ளுங்கள்.