கோபத்தில் மைக்கை தூக்கி வீசியது ஏன்? உண்மையைக் கூறி வருந்திய பார்த்திபன்
பார்த்திபன் நடிப்பில் உருவாகியுள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியிடுகையில் பார்த்திபன் கோபத்தில் மைக்கை தூக்கி வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏ.ஆர்.ரஹ்மானுடன் பார்த்திபன்
பார்த்திபன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’இரவின் நிழல்’. இப்படத்தில் பார்த்திபன் நடித்துள்ளார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மேடை அலங்காரங்கள், லைட் செட்டிங் எல்லாம் அம்சமாக ரெடி செய்திருந்தனர்.
இதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடகி ஷ்ரேயா கோஷல் குரலில் பாடியுள்ள ‘மாயவா சாயவா’ எனும் பாடலை இயக்குநர் பார்த்திபன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் சமுத்திரகனி, பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் கரு பழனியப்பன் மற்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபனா சந்திரசேகர், ரோபோ சங்கர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இரவின் நிழல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் மேடையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நினைவு பரிசாக அவரது தாய் மற்றும் தந்தை உருவப்படம் பதிக்கப்பட்டுள்ள இசை வடிவ கேடயத்தை இயக்குநர் பார்த்திபன் வழங்கினார்.
தூக்கத்தில் பேசுபவரா நீங்கள்? அலட்சியம் வேண்டாம்
பார்த்திபன் கோபத்திற்கு காரணம் என்ன?
இந்நிலையில் ஏஆர்.ரஹ்மானுடன் பேசிக்கொண்டிருக்கையில் கோபமாக மைக்கை தூக்கி வீசினார் பார்த்திபன். இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் மைக் வேலை செய்யவில்லை என்பதே என்று கூறப்பட்டது.
ஆனால் முதல் சிங்கிள் வெளியிடுவது பற்றிய அறிவிப்பை ரோபோ சங்கர் ஓரிரு வார்த்தையில் அறிவிக்க திட்டமிருந்துள்ளனர்.
அத்தருணத்தில் ரோபோ சங்கர் மைக் வேண்டும் என்று கேட்க, மேடையில் ஏஆர்.ரஹ்மானுடன் அமர்ந்திருந்த பார்த்திபன் அங்கிருந்தே ஒரு மைக்கை ரோபோ சங்கரை நோக்கி வீசியதுடன், அதை முன்னாடி இல்ல கேட்கணும் என்று கோபமாக பேசினார்.
பார்த்திபனின் இந்த செயலால் அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில், ரோபோ சங்கர் அந்த ஒரு வரி அறிவிப்பை சற்று பதட்டத்துடனேயே வெளியிட்டு பின்பு மைக்கை கொடுத்துள்ளார்.
சமந்தாவை அழவைத்து சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகர்! நள்ளிரவில் நடந்தது என்ன?
வருந்திய பார்த்திபன் பேசியது என்ன?
இந்நிலையில், நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய பார்த்திபன், நிகழ்ச்சியில் தான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாகவும் தனது அநாகரீகமான செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், ரஹ்மான் அவர்களுக்கு அந்த ஷீல்டு கொடுக்கையில் பதட்டம் அடைந்துவிட்டதாகவும், தூக்கமின்றி வேலை செய்த டென்ஷன் எல்லாம் சேர்ந்து அப்படி செய்து விட்டேன். இனி சரி செய்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
பேத்தியை வரவேற்க தாத்தா செய்த காரியம்! வைரலான விவசாயி